என்னது ? டி.டி.வி.தினகரனா ? யாருப்பா அது ? ஒரே போடாய் போட்ட சுகேஷ் சந்திர சேகர்….

 
Published : Apr 25, 2017, 06:02 PM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
என்னது ? டி.டி.வி.தினகரனா ? யாருப்பா அது ? ஒரே போடாய் போட்ட சுகேஷ் சந்திர சேகர்….

சுருக்கம்

Sugesh chandra sekar press meet

என்னது ? டி.டி.வி.தினகரனா ? யாருப்பா அது ? ஒரே போடாய் போட்ட சுகேஷ் சந்திர சேகர்….

டிடிவி தினகரனை யார் என்றே எனக்குத் தெரியாது என்றும் பழைய குற்றச்செயல்கள் காரணமாகவே கைது செய்யப்பட்டுள்ளேன் என்றும் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இரட்டை இலை சின்னத்தை திரும்பப் பெற தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் முயன்றதாக டி.டி.வி.தினகரன் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக கடந்த வாரம் சுகேஷ் சந்திரசேகர் என்ற அரசியல் தரகரரை, டெல்லி போலீசார் 1 கோடியே 30 லட்சத்துடன் பணத்துடன்  கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க டிடிவி தினகரன் 50 கோடி ரூபாய் பேரம் பேசியதாகவும், அதில் குறிப்பிட்ட தொகையை முன்பணமாக பெற்றதாகவும் கூறினார்.

இதனையடுத்து தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக டெல்லி சாணக்கியபுரி , காவல் நிலையத்தில் கடந்த நான்கு நாட்களாக தினகரனிடமும், விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சுகேஷ் சந்திரசேகர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் அவர்,  டிடிவி தினகரன் யார் என்றே எனக்குத் தெரியாது. என கூறினார்

பழைய குற்றச்செயல்கள் காரணமாகவே கைது செய்யப்பட்டுள்ளேன் என்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக எந்த தவறும் செய்யவில்லை என்றும் சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்தார்.

 

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!