
இரட்டை இலை விவகாரத்தில் பன்னீர்செல்வம் அணி சார்பில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை ராணுவக் கட்டுப்பாட்டுடன் கனகம்பீரமாக இருந்த அதிமுக இன்று தரையில் விழுந்த கண்ணாடியைப் போன்று சுக்குநூறாக சிதறியுள்ளது. சசிகலா, ஓ.பி.எஸ். எடப்பாடி,போதாதகுறைக்கு தீபாவும் என கேட்பதற்கே தலைசுற்றுகிறது.
இரட்டை இலையை கைப்பற்றினால் தான் கட்சியை கைப்பற்ற முடியும் என்ற எண்ணத்தில் சசிகலா, ஓ.பி.எஸ். அணியினர் முஷ்டி முறுக்க விவகாரம் தேர்தல் ஆணையத்தில் போய் நின்றது.
இரு தரப்பையும் டெல்லி அழைத்த ஆணையம் விசாரணை நடத்தியது.
சசிகலா தாக்கல் செய்த ஆவணங்களுக்கு இணையாக பன்னீர்செல்வம் தரப்பும் பேப்பர்களை நீட்ட, வேறு வழியின்றி இரட்டை இலை சின்னத்தையும், அதிமுக என்ற கட்சியின் பெயரையும் தேர்தல் ஆணையம் முடக்கியது.
இந்தச் சூழலில் பன்னீர்செல்வம் தர்பினர் கூடுதலாக 6500 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்துள்ளது.....