திடீர் அதிர்ச்சி... இப்படியெல்லாம் கூட நடந்து கொள்வாரா மோடி..?

By Thiraviaraj RMFirst Published Jun 3, 2021, 7:13 PM IST
Highlights

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டே முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பே முக்கியம். 

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்துவது தொடர்பாக நேற்று பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட்டது. 

கூட்ட முடிவில் பேசிய பிரதமர், ''சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் பாதுகாப்பே முக்கியம். அதில், எந்தவித சமரசமும் செய்துகொள்ள முடியாது. மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களின் பதற்றத்துக்கு முற்றுப்பள்ளி வைக்கப்பட வேண்டும் என்பதற்காகவே ரத்து செய்யப்பட்டுள்ளது. என அவர் தெரிவித்தார்.

இம்முடிவை ஒருசாரார் வரவேற்கின்றனர். ஆனால் இந்த முடிவு சிறப்பானது இல்லை என ஒருசில எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. பொதுத் தேர்வை ரத்து செய்த மத்திய அரசு, நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

மத்திய அரசின் தேர்வு ரத்து முடிவுக்கு மாணவர்களும் பெற்றோர்களும் பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்தனர். அப்படி நன்றி தெரிவத்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அவர்களது ட்வீட்டை ரீட்வீட் செய்து பிரதமர் பதிலளிக்க ஆரம்பித்துவிட்டார். இதனால் அனைவரும் நெகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஆசிரியர் ஒருவரின் பதிவுக்குப் பதிலளித்த பிரதமர் மோடி,”கடந்த ஆண்டில் ஆசிரியர் சமூகம் சிறந்த பங்காற்றி உள்ளது. புதிய இயல்பு வாழ்க்கையிலும் கல்விப் பயணத்தை உறுதி செய்து, மாணவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் ஆசிரியர்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன்” என்றார்.

மற்றொருவரின் ட்வீட்டுக்குப் பதிலளித்த அவர், ‘”மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டே முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பே முக்கியம். நீங்கள் கூறியதுபோல தற்போதைய சூழலில் இந்த முடிவுதான் சிறப்பான மற்றும் மாணவர் நலன் சார்ந்த முடிவு” என்று குறிப்பிட்டிருந்தார். 
 

click me!