முக்கிய கோவில்களில் திடீர் சாமி தரிசனம்... முக்கிய முடிவை அறிவிக்க போகிறார் ஓபிஎஸ்? அதிமுகவில் பரபரப்பு..!

By vinoth kumarFirst Published Oct 2, 2020, 12:03 PM IST
Highlights

பெரியபாளையம் பவானியம்மன், சிறுவாபுரி முருகன் கோயில்களில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சிறப்பு தரிசனம் செய்ததையடுத்து முக்கிய முடிவை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெரியபாளையம் பவானியம்மன், சிறுவாபுரி முருகன் கோயில்களில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சிறப்பு தரிசனம் செய்ததையடுத்து முக்கிய முடிவை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

2021ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில்,  அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அதிகார போட்டி உச்சத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்திலும் இந்த பிரச்சனை எதிரொலித்தது. ஆனால், முடிவு எட்டப்படவில்லை. அதனால், முதல்வர் எடப்பாடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளை கடந்த சில நாட்களாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் தவிர்த்து வருகிறார். மேலும், இருவரும் அவரது ஆதரவாளர்களுடன் அடிக்கடி ஆலோசனையும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மாலை 7 மணிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அங்கிருந்து புறப்பட்டு பெரியபாளையம் அம்மன் கோவிலுக்கும் சென்று சாமி  தரிசனம் செய்தார்.  . பின்னர், அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டார். இந்த இரண்டு கோயில்களிலும், அடுத்த முதல்வர் வேட்பாளராக தான் அறிவிக்கப்பட்டு, முதல்வர் ஆகவேண்டும் என்பதற்காக நீண்ட நேரம் சிறப்பு தரிசனத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மறுபுறம் பொதுவாக, எந்த முக்கிய முடிவையும் எடுத்து அறிவிப்பதற்கு முன்பாக ஓ.பன்னீர்செல்வம், முருகன் கோவிலுக்கும், அம்மன் கோவிலுக்கும் செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. ஆகையால், இன்றோ, நாளையோ ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்திக்க வய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

click me!