அதிமுக முன்னாள் அமைச்சர் மீது பண மோசடி புகார் கூறியவர் திடீர் மரணம்.. திட்டமிட்ட சதியா? பகீர் தகவல்.!

By vinoth kumarFirst Published Jan 27, 2022, 12:40 PM IST
Highlights

அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா மீது பணமோசடி புகார் கொடுத்தவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா மீது பணமோசடி புகார் கொடுத்தவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராசிபுரத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜாவின் உறவினரான குணசீலன் என்பவர் சத்துணவு வேலை வாங்கி தருவதாக கூறி 15 பேரில் ரூ.76,50,000 பெற்று, சரோஜா மற்றும் கணவர் லோகரஞ்சனிடமும் இரண்டு தவணைகளாக மொத்தப் பணத்தையும் கொடுத்துள்ளார். ஆனால், வேலை வாங்கி தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். பொறுமை இழந்த குணசீலன் முன்னாள் அமைச்சர் சரோஜா மீது கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி காவல்  நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து, குணசீலன் அளித்த புகாரின் அடிப்படையில், நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ், முன்னாள் அமைச்சர் சரோஜா மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு முன்னாள் அமைச்சர் சரோஜா தரப்பில் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர். சென்னை உயர்நீதிமன்றத்திலும் முன்ஜாமின் கோரிய மனு இன்னும் நிலுவையில் இருந்து வருகிறது. 

இந்நிலையில்,   முன்னாள் அமைச்சர் சரோஜா மீது புகார் கொடுத்த குணசீலனுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சரோஜா மீது போடப்பட்ட வழக்கில் குணசீலனின் வழக்கறிஞரை சரோஜா தரப்பினர் பேரம்பேசி விலைக்கு வாங்கி வழக்கை வாபஸ் பெற முயற்சி செய்ததில் மன உளைச்சல் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

click me!