அமைச்சர் சேகர்பாபு மகளை காதலித்தவரின் நிலைமை என்ன ஆச்சு தெரியுமா? புட்டு புட்டு வைத்த எச்.ராஜா..!

By vinoth kumarFirst Published Jan 27, 2022, 11:26 AM IST
Highlights

இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மகளை காதலித்த சதீஷ் என்பவரை திருவள்ளூர் மாவட்ட காவல் துறையினர் சட்டவிரோதமாக  60 நாட்களாக அடைத்து வைத்து அவர் மீது பொய் வழக்குப் பதிவு செய்தனர். அவரை ஆட்கொணர்வு சட்டம் மூலம் வெளியில் கொண்டு வந்தனர். அதிமுக நிர்வாகி நந்தன் மீது  பொய் வழக்கு பதிவு செய்த  திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பில் கலப்படம், தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டு மாபெரும் ஊழல் நடந்துள்ளதாக எச்.ராஜா குற்றம்சாட்டியள்ளார்.

பொங்கல் பரிசு தொகுப்பில் பல்லி இருப்பதாக வதந்தி செய்தி பரப்பியதாக கூறி, நந்தன் மீது திருத்தணி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனால், மனஉளைச்சலுக்கு உள்ளான நந்தனின் மகன் குப்புசாமி(36), கடந்த 11-ம் தேதி தீக்குளித்து உயிரிழந்தார். இந்நிலையில், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் எச்.ராஜா திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். பின்னர் அங்கிருந்து  தற்கொலை செய்துகொண்ட குப்புசாமி வீட்டிற்குச் சென்று அவரது தந்தை நந்தன் மற்றும் அவர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.  

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எச்.ராஜா;- தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பில் கலப்படம், தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டு மாபெரும் ஊழல் நடந்துள்ளது. இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மகளை காதலித்த சதீஷ் என்பவரை திருவள்ளூர் மாவட்ட காவல் துறையினர் சட்டவிரோதமாக  60 நாட்களாக அடைத்து வைத்து அவர் மீது பொய் வழக்குப் பதிவு செய்தனர். அவரை ஆட்கொணர்வு சட்டம் மூலம் வெளியில் கொண்டு வந்தனர். அதிமுக நிர்வாகி நந்தன் மீது  பொய் வழக்கு பதிவு செய்த  திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

திருத்தணியில் பாதிக்கப்பட்ட நந்தன் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்து  உரிய விசாரணை நடத்த வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் தூய கிருபை மேல்நிலைப்பள்ளியில் பயின்ற லாவண்யா இறந்த விவகாரத்தில் ஏன் முதலமைச்சர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட யாரும் வாய் திறக்கவில்லை? என எச்.ராஜா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

click me!