ரெட்ட இலையானு கேட்டவங்க கிட்ட தாமரை, ஐயா தாமரைனு ஓட்டு கேட்டது நாங்கதான்.. ஆதங்கத்தை கொட்டி தீர்த்த அதிமுக

Published : Jan 27, 2022, 08:15 AM IST
ரெட்ட இலையானு கேட்டவங்க கிட்ட தாமரை, ஐயா தாமரைனு ஓட்டு கேட்டது நாங்கதான்.. ஆதங்கத்தை கொட்டி தீர்த்த அதிமுக

சுருக்கம்

நயினார் நாகேந்திரனின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆண்மை இருந்தால், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தனியாகப் போட்டியிட்டு ஆண்மையை நிரூபியுங்கள் என்று சமூக ஊடகங்களில் அதிமுகவினர் நயினார் நாகேந்திரனுக்கு பதிலடி கொடுத்தனர்.

தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது. நயினார் நாகேந்திரன் நெல்லைக்கு வரும்போது கருப்புக்கொடி காட்டப்படும் என அதிமுக கழக அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவம் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாணவி மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தமிழக பாஜக சார்பில் சென்னையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பாஜக துணை தலைவரும் சட்டப்பேரவை பாஜக தலைவருமான நயினார் நாகேந்திரன் பேசியது சர்ச்சையானது. அவர் பேசும்போது, “தமிழகத்தில் அதிமுக எதிர்க்கட்சி போல செயல்படவில்லை. பாஜக எதிர்க்கட்சியாக இல்லை என்றாலும்கூட துணிந்து கேள்வி எழுப்புகிறது. சட்டப்பேரவையில் ஆண்மையோடு பேச அதிமுகவில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை . மக்கள் பிரச்சினையை சட்டப்பேரவையில்  பேசுவதில்லை. பாஜகவின் அண்ணாமலை மட்டுமே துணிச்சலோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார், எதிர்க்கட்சியாக இல்லை என்றாலும் ஊடகங்களுக்கு தைரியமாக பேட்டி கொடுப்பவர் அண்ணாமலை மட்டுமே” என நயினார் நாகேந்திரன் பேசியிருந்தார்.

நயினார் நாகேந்திரனின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆண்மை இருந்தால், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தனியாகப் போட்டியிட்டு ஆண்மையை நிரூபியுங்கள் என்று சமூக ஊடகங்களில் அதிமுகவினர் நயினார் நாகேந்திரனுக்கு பதிலடி கொடுத்தனர்.

இந்நிலையில், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டையில் அதிமுக கழக அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவம் செய்தியாளர்களுக்கு பேட்டிளிக்கையில்;- எம்ஜிஆர், ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டு 50 வருடங்களாகும் அதிமுக, இன்று இந்தியாவில் மாபெரும் அரசியல் இயக்கமாக திகழ்கிறது. இந்த இயக்கத்தில் அமைச்சராக, 3 முறை எம்எல்ஏவாக பதவி வகித்து, தற்போது அதிமுக தயவால் வெற்றி பெற்ற நயினார் நாகேந்திரன், அதிமுக எம்எல்ஏக்களை பற்றி பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

நெல்லையில் பாஜகவுக்கு என்று தனியாக ஓட்டு வங்கி கிடையாது. தமிழகத்தில் பாஜக கட்சிக்கு தொண்டர்களே இல்லை. குறிப்பாக தென்காசி, குமாரி, கோயம்புத்தூர் ஆகிய பகுதியில் மட்டும் சில தொண்டர்கள் உள்ளனர். ஆனால், நெல்லை சட்டமன்ற தேர்தலில் அதிமுக தொண்டர்கள் உழைத்ததால்தான் நயினார் நாகேந்திரன் தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். 

பாஜகவுக்கு சென்ற நயினார் நாகேந்திரனுக்கு அதிமுகவை விமர்சிக்க எந்த தகுதியும் கிடையாது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் பேசி வெளிநடப்பு செய்துள்ளார். ஆனால் சட்டமன்றத்தில் நயினார் நாகேந்திரன்  பேசுவதில்லை. வானதி சீனிவாசன் தான் பேசுகிறார். எனவே அதிமுக தயவால் எம்எல்ஏவாக வெற்றி பெற்ற நயினார் நாகேந்திரன், தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தனித்துப் போட்டியிட வேண்டும். அதிமுக தயவு இல்லாமல், தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது. நயினார் நாகேந்திரன் நெல்லைக்கு வரும்போது கருப்புக்கொடி காட்டப்படும் என ஆவேசமாக தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

திமுககாரன் ரெண்டு பேர் இருந்தாலும் கடைசி வரை பூத்ல இருப்பான். ஆனா, நாம..? பொதுக்குழுவில் எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை..!
210 இடங்களில் அதிமுகவின் வெற்றி உறுதி.. பொதுக்குழுவில் அடித்துக் கூறும் இபிஎஸ்