சூடான் நாட்டு தீயில் கருகிய 20 இந்தியர்கள்...!! உடல்களை கொண்டுவர அரசுக்கு கோரிக்கை..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 5, 2019, 3:30 PM IST
Highlights

வாழ்வாதாரத்தை தேடி, கடல் கடந்து சென்ற நம் உறவுகளுக்கு ஏற்பட்டிருக்கும்  இந்நிலையை அறிந்து, அவர்களது குடும்பத்தினர்  துடிதுடித்துப் போயிருக்கிறார்கள்.

சூடான் நாட்டு தீவிபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடலை தாய் நாட்டிக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகப்படினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், 

சூடான் தலைநகர் கார்ட் டோமில்  ஏற்பட்ட தீ விபத்தில் 3 தமிழர்கள் உட்பட 20 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாகவும், 130 க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாகவும் வரும் தகவல்கள் ஆழ்ந்த வேதனையளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு  இரங்கலையும், காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்வாதாரத்தை தேடி, கடல் கடந்து சென்ற நம் உறவுகளுக்கு ஏற்பட்டிருக்கும்  இந்நிலையை அறிந்து, அவர்களது குடும்பத்தினர்  துடிதுடித்துப் போயிருக்கிறார்கள்.

 

இறந்தவர்களின் உறவுகளை தாயகத்திற்கு கொண்டு வந்து அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்.அது போல் காயமடைந்தவர்களுக்கு உரிய கிசிச்சைக்கான நடவடிக்கைகளை  எடுப்பதோடு, அவர்கள் அரசு செலவில் நாடு திரும்பவும் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 
 

click me!