மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தான் நாட்டின் பிரதமராக இருக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தான் நாட்டின் பிரதமராக இருக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுக்குறித்து பேசிய அவர், நாட்டிற்கு அதிகாரத்தில் உள்ளவர்களால் அச்சுறுத்த முடியாத ஒரு உண்மையான எதிர்க்கட்சி தேவை என்று நினைக்கிறேன். எனக்கு நிறைய தலைவர்களை தெரியும். ஆனால், அவர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஒரு கட்டத்திற்கு மேல் செல்லமாட்டார்கள். ஏனென்றால் அமலாக்கத்துறை அல்லது வேறு ஏதாவது ஒரு அமைப்புகள் மூலம் தங்கள் மீது நடவடிக்கை பாயும் என்று அவர்கள் பயப்படுகிறார்கள்.
இதையும் படிங்க: Watch : வாக்குச்சாவடி முன்பு பிறந்தநாள் கொண்டாடிய பாஜக வேட்பாளர்!
இது இந்திய ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. ஆளுங்கட்சிக்கு நண்பர் அல்லாத ஒருவர் தான் தற்போது நாட்டிற்கு தேவை. அதுபோன்ற பலரை நாம் காணலாம். இந்த நடவடிக்கைகளை சிலர் பகிரங்கமாகவும், சிலர் சத்தமின்றியும் செய்கின்றனர். மம்தா பானர்ஜி இந்தியாவின் பிரதமராக வேண்டும். அவர் ஒரு துணிச்சலான பெண். அவர் எப்படி கம்யூனிஸ்டுகளை எதிர்த்துப் போராடினார் என்பதைப் பாருங்கள். நான் அவரை 10 நாட்களுக்கு முன்பு சந்தித்தேன், ஆனால் அது யாருக்கும் தெரியாது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி விவகாரத்தை கையில் எடுத்த பாஜக.. திணறப் போகும் திமுக அரசு - பகீர் பின்னணி
மம்தா பானர்ஜியை அச்சுறுத்துவது என்பது சாத்தியமற்றது. அந்தச் சந்திப்பில் 2024 எப்படி இருக்கும், அப்போது பொருளாதாரத்தின் வடிவம் என்னவாக இருக்கும் என்று விவாதித்தோம். நாட்டிலேயே மிகவும் சக்திவாய்ந்த பெண்மணி ஒரு காலத்தில் ஜெயலலிதாவும், அதற்கு பின்பு மாயாவதியும் சக்திவாய்ந்த பெண்மணியாக இருப்பர் என கருதினேன். ஆனால், தற்போதைய சூழலில் நாட்டின் வலிமையான பெண் என்றால் அது மம்தா பானர்ஜி தான் என்று தெரிவித்துள்ளார்.