ரஜினி இனியும் சினிமா டயலாக் பேசினால் கடுமையாக எதிர்ப்பேன்...!! மோசமாக எச்சரித்த பாஜக தலைவர்...!!

Published : Feb 08, 2020, 02:47 PM ISTUpdated : Feb 08, 2020, 02:48 PM IST
ரஜினி இனியும்  சினிமா டயலாக் பேசினால் கடுமையாக எதிர்ப்பேன்...!! மோசமாக எச்சரித்த பாஜக  தலைவர்...!!

சுருக்கம்

ஆனால் அவர் இந்து மதத்திற்கு ஆதரவாக பேசினால் அவரை ஆதரித்து அவருடன் சேர்ந்து இருப்பேன் என அவர் தெரிவித்துள்ளார் . 

நடிகர் ரஜினிகாந்த்தை ஆதரிக்க தயார் என பாஜகவின் மூத்த  தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார் .   ஒட்டுமொத்த பாஜக தலைவர்களும் நடிகர் ரஜினிகாந்தை ஆதரித்து வந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்தவர் சுப்பிரமணியசாமி .  ரஜினி ஒரு சினிமா நடிகர் அவருக்கு அரசியலில் எதுவும் தெரியாது , சுயமாக சிந்திக்கும் திறன் அற்றவர்  என்பது போன்ற கடுமையான வார்த்தைகளில் ரஜினியை தொடர்ந்து விமர்சித்து வந்தார் சாமி. 

திடீரென சாமி ரஜினியை ஆதரிக்க தொடங்கியுள்ளார்.  ரஜினிகாந்த் இந்து மதத்திற்கு ஆதரவாக பேசுவதால் அவரை ஆதரிப்பதுடன் ,  அவருடன் இருப்பேன் எனவும் சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார் .  சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்த பிறகு வழக்கம்போல சினிமா டயலாக்கை பேசினாள் அவரை நிச்சயம் எதிர்பேன்,   ஆனால் அவர் இந்து மதத்திற்கு ஆதரவாக பேசினால் அவரை ஆதரித்து அவருடன் சேர்ந்து இருப்பேன் என அவர் தெரிவித்துள்ளார் . 

தொடர்ந்து பேசிய அவர் நடிகர் விஜயை படப்பிடிப்பில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்துவந்து சோதனை நடத்தியது சரியில்லை என  விஜய் கருதினால் வழக்கறிஞர்களை ஆலோசித்து வழக்கு தொடரலாம் என்றார்.  மற்றபடி ஒன்றும் தவறு இல்லை என்றால் நடிகர் விஜய் ஏன் கவலைப்பட வேண்டும் என்றார்.  மத்திய நிதியமைச்சர் பதவியை தன்னிடம்  கொடுத்தால் பொருளாதார நிலையை மாற்றி காட்டுவேன், மேலும் வங்கிப் பணத்துடன் தலைமறைவான  விஜய் மல்லையா,  நீரவ் மோடி ஆகியோரை பிடித்து காட்டுவேன் என்றார்.
 

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!