ஸ்டாலின் , தயாநிதி மாறன் மீது புதிய வழக்கு...!! சுற்றி வளைத்து ஸ்கெட்ச் போட்ட அமைச்சர்கள்...!!

By Ezhilarasan BabuFirst Published Feb 8, 2020, 1:29 PM IST
Highlights

முறைகேடு தொடர்பாக தகவல் தெரிந்தால் ஸ்டாலின் சிபிசிஐடி யிடம் சென்று சொல்ல வேண்டும். ஆனால் தகவல் தெரிந்து சொல்லாமல் இருந்து சொல்லாமல் இருந்தாலும் அவர்களுக்கு சம்மன் அனுப்பி உண்மை வரவழைக்கப்படும். தயாநிதிமாறன் நேரடியாக என்மீது குற்றம்சாட்டியதால் அவர் மீது வழக்கு தொடர்ந்தோம் , 

கேங்மேன் தேர்வில் 90 ஆயிரம் பேர் கலந்துக்கொண்டனர் , அது முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது . முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை , கோர்ட்டில் வீடியோ பதிவை கொடுக்கவும் தயாராக உள்ளோம்.  தேர்வு ஒளிவுமறைவின்றி நடந்துள்ளது என மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.மின்துறை அமைச்சர் தங்கமணி,  மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர்  சென்னை செனாய் நகரில் உள்ள அம்மா அரங்கத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளர்கள் கழகத்தின் பேரவைக் கூட்டதில் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி 

தமிழகத்தில் மட்டுமே 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது ஸ்டாலின் தூங்கி எழுந்து மீண்டும் தூங்கும் வரை பதவி விலக வேண்டும் எனவும் ஆட்சி டிஸ்மிஸ் எனவும் சொல்லிக் கொண்டே இருக்கிறார். இதே திமுக ஆட்சியாக இருந்தால் டிஎன்பிஎஸ்சி முறைகேடு மறைக்கப்பட்டிருக்கும். ஆனால் நாங்கள் தற்போது வரையிலே 34 பேரை கைது செய்திருக்கிறோம் . பொத்தாம் பொதுவாக உள்நோக்கத்தோடும் காழ்ப்புணர்ச்சியோடும் ஸ்டாலின் குற்றம்சாட்டுகிறார். முறைகேட்டில் உள்ள உயரதிகாரிகள் யார் என்பதை ஸ்டாலின் சொல்ல வேண்டும் ஆனால் அதைவிட்டு மக்களை திசை திருப்ப ஸ்டாலின் குற்றம்சாட்டி வருகிறார் . முறைகேடு தொடர்பாக தகவல் தெரிந்தால் ஸ்டாலின் சிபிசிஐடி யிடம் சென்று சொல்ல வேண்டும். ஆனால் தகவல் தெரிந்து சொல்லாமல் இருந்து சொல்லாமல் இருந்தாலும் அவர்களுக்கு சம்மன் அனுப்பி உண்மை வரவழைக்கப்படும். 

தயாநிதிமாறன் நேரடியாக என்மீது குற்றம்சாட்டியதால் அவர் மீது வழக்கு தொடர்ந்தோம் ,ஸ்டாலின் என்மீது குற்றச்சாட்டு கூறினாலும் வழக்கு தொடரப்படும்  தேர்வுகளில் தவறுகள் நடக்கும் வாய்ப்புகள் அடைக்கப்பட்டு வரும்காலத்தில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்கப்படும் 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி பேட்டி விவரம்: - மின் வாரிய தேர்வில் தவறு நடக்க வாய்ப்பு இல்லை , ஒளிவுமறைவின்றி தேர்வுதள் நடைபெறுகிறது  பூரண மதுவிலக்கு தான் அரசு கொள்கை , படிப்படியாக கடைகள் குறைக்கப்படுகிறது .மதுபானங்கள் பிளாக்கில் விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்  கேங்மேன் தேர்வில் 90 ஆயிரம் பேர் கலந்துக்கொண்டனர் , முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது .முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை , கோர்ட்டில் வீடியோ பதிவை கொடுக்கவும் தயாராக உள்ளோம். தேர்வு ஒளிவுமறைவின்றி நடந்துள்ளது. 



 

click me!