’பாஜகவை சேர்ந்த அந்த 10 பேரும் இப்ப வாங்கடா...’சவால்விட்டு நெய்வேலியில் படைபடையாய் திரளும் விஜய் ரசிகர்கள்..!

Published : Feb 08, 2020, 12:11 PM IST
’பாஜகவை சேர்ந்த அந்த 10 பேரும் இப்ப வாங்கடா...’சவால்விட்டு நெய்வேலியில் படைபடையாய் திரளும் விஜய் ரசிகர்கள்..!

சுருக்கம்

விஜய் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு கார்களில் அணிவகுத்து நெய்வேலியில் குவிந்துள்ளனர். போராட்டம் நடத்திய பாஜகவினர் இப்போது வரலாம் என அவர்கள் சவால் விடுத்துள்ளனர்.

நெய்வேலியில் விஜய் படப்பிடிப்பை நடத்தக்கூடாது  என பாஜகவினர் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் தமிழகத்தின் மூலைமுக்குகளில் இருந்தெல்லாம் கிளம்பி நெய்வேலியில் திரண்டு வருகின்றனர்.

 

திரையுலகையும், அரசியல் உலகையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது விஜய் மற்றும் அவர் மீதான வருமான வரித்துறை நடவடிக்கை. படப்பிடிப்பு தளத்துக்கே வந்து அள்ளிச் சென்றனர் அதிகாரிகள். பெரும் சர்ச்சை, பரபரப்பு என அந்த அதிரடிகள் ஒரு வழியாக முடிந்து மாஸ்டர் படப்பிடிப்பு மீண்டும் நெய்வேலியில் தொடங்கி இருக்கிறது. ஆனால், பாஜக விடுவது போல் இல்லை. என்எல்சி பகுதிக்கே சென்று பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விஜய் மீது தொடுக்கப்பட்டுள்ளது வெறும் ரெய்டு அல்ல. அது ஒரு நியாயம் அற்ற போர். யார், எதற்காக இந்த போரை விஜய் மீது ஆரமிபித்து உள்ளார்கள்?

#Vijay https://t.co/qwU9mcmPAd

 

தகவல் அறிந்த ரசிகர்களும் குவிய, கடைசியில் அந்த விவகாரம் சர்ச்சையில் முடிந்திருக்கிறது. ஆனாலும் விஜய் ரசிகர்களின் கோபம் குறையவில்லை. விஜய் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு கார்களில் அணிவகுத்து நெய்வேலியில் குவிந்துள்ளனர். போராட்டம் நடத்திய பாஜகவினர் இப்போது வரலாம் என அவர்கள் சவால் விடுத்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளிலேயே பாகிஸ்தானிடம் அடி வாங்கியது இந்தியா..! காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு..!
சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்