"விஜயை அச்சுறுத்த நினைக்காதீங்க... உங்க கனவு பலிக்காது..." பாஜகவுக்கு எதிராக கொதிக்கும் திருமாவளவன்..!

Published : Feb 08, 2020, 12:44 PM IST
"விஜயை அச்சுறுத்த நினைக்காதீங்க... உங்க கனவு பலிக்காது..." பாஜகவுக்கு எதிராக கொதிக்கும் திருமாவளவன்..!

சுருக்கம்

நடிகர் விஜய்யிடம் வருமான வரித் துறை விசாரணை மேற்கொண்ட முறையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்  கண்டித்துள்ளார் .   

நடிகர் விஜய்யிடம் வருமான வரித் துறை விசாரணை மேற்கொண்ட முறையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்  கண்டித்துள்ளார். 

செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசுகையில், “இதுவரை இல்லாத வகையில் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து நடிகர் விஜய் வருமான வரித் துறை சோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டது சரியல்ல. வருமான வரித் துறை இப்படி நடந்து கொள்ளும் அளவுக்கு அவ்வளவு நேர்முடையதா என்கிற கேள்வி எழுகிறது. விஜய் வருமான வரித் துறைக்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால், அரசியல் ஆதாயத்துக்காக, தூண்டுதலின் பெயரில் வருமான வரித் துறை செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கும் விஜய்க்கும் என்னப் பிரச்னை இருக்கிறது என்பது குறித்து எனக்குத் தெரியாது.

ஆனால், மத்தியில் தாங்கள் ஆட்சியில் இருப்பதனாலும், மாநிலத்தில் தங்களது கூட்டணிக் கட்சி ஆட்சியில் இருப்பதனாலும், யாரை வேண்டுமானாலும் சீண்டலாம் என்று நினைக்கிறது பாஜக. இது கண்டிக்கத்தக்கது. விஜயை அச்சுறுத்தும் பாஜகவின் கனவு பலிக்காது ” என்று கொதித்துள்ளார்

PREV
click me!

Recommended Stories

தமிழக எம்.பி.களுக்கு செம டோஸ் விட்ட ராகுல் காந்தி..? டெல்லியில் நடந்தது என்ன..? செல்வப்பெருந்தகை ஓபன் டாக்
விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!