பாஜக இருக்கும் துணிச்சலில்தான் சீமான் இப்படி பேசுகிறார்.. அவரின் திமிரை அடக்கியே தீரணும்.. சுப.வீரபாண்டியன்.!

By vinoth kumarFirst Published Feb 1, 2023, 7:30 AM IST
Highlights

சீமான், பேனா நினைவு சின்னம் கடலில் அமைப்பதால் பவளப்பாறைகள் பாதிக்கப்படும் அதனால் அங்கு அமைக்க கூடாது. வேண்டுமானால் அண்ணா அறிவாலயத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் அதையும் மீறி வைத்தால் நான் ஆட்சிக்கு வந்தவுடன் அதை இடிப்பேன் என்று பேசினார். 

கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் கடலில் வைத்தால் அதை உடைப்பேன் என்று சீமான் பேசியதற்கு பாஜக பின்னால் இருக்கும் துணிச்சலின் வெளிப்பாடு என சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார். 

கலைஞர் பேனா நினைவு சின்னம் கருத்து கேட்பு கூட்டம் கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சமூக ஆர்வலர்கள், சுற்று சூழல் ஆர்வலர்கள், மீனவர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதனையடுத்து இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பேனா நினைவு சின்னம் கடலில் அமைப்பதால் பவளப்பாறைகள் பாதிக்கப்படும் அதனால் அங்கு அமைக்க கூடாது. வேண்டுமானால் அண்ணா அறிவாலயத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் அதையும் மீறி வைத்தால் நான் ஆட்சிக்கு வந்தவுடன் அதை இடிப்பேன் என்று பேசினார். 

இதையும் படிங்க;- இதே பொழப்பா போச்சு! செத்தவங்க திரும்பி வர மாட்டாங்க என்பதால் அடிச்சுவிடும் சீமான்! கொதிக்கும் செல்வப்பெருந்தகை

இதனையடுத்து வெளியே வந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான்;- கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பதை எதிர்க்கவில்லை. கடலுக்கு நடுவே அமைக்க தான் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினார். பள்ளிக்கூடத்தை சீரமைக்க காசு இல்லை, முதியவர்களுக்கு உதவித்தொகை கொடுக்க காசில்லை, பேனா சின்னம் அமைக்க மட்டும் காசு எங்கு இருந்து வந்தது என கேள்வி எழுப்பினார். அண்ணா அறிவாலயம் அல்லது நினைவிடத்தில் வைக்கலாம் ஆனால் கடலுக்குள் மட்டும் தான் வைப்பேன் என சொல்வது தவறு. கடலில் பேனா சின்னம் திட்டத்தை நிறுத்தும் வரை எதிர்ப்போம். மீறி வைத்தால் ஒரு நாள் அது எங்கு இருக்கும் என நீங்கள் பார்ப்பீர்கள் என்றார். இவரது பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இதுதொடர்பாக திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், சென்னை, கடற்கரைப் பகுதியில் தலைவர் கலைஞரின் பேனாவிற்குச் சிலை வைப்பது குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் நடந்துள்ளது. அதில் தன் கட்சியின் கருத்தை உரைக்க,  நாம் தமிழர் கட்சியின் சீமான் வந்துள்ளார்.

இதையும் படிங்க;-  சென்னையே மூழ்க போகுது..! கருணாநிதிக்கு மெரினா கடலில் நினைவுச்சின்னமா..! கருத்து கேட்பு கூட்டத்தில் மோதல்

அதில் எந்த ஒரு கருத்தையும் சொல்வதற்கு அவருக்கு உரிமை உண்டு. ஆனால், "நீ பேனா வைத்தால் நானே அதை உடைப்பேன்" என்று அவர் பொதுவெளியில் பேசியுள்ளது வெறும் கருத்தாகாது. அது வன்முறையின் வெளிப்பாடு. அது வெறும் கருத்துதான் என்றால், இன்னொருவர் "நீ பேனா சிலையை உடைத்தால், நான் உன் கையை வெட்டுவேன்" என்று சொல்லக்கூடும். அதுவும் வெறும் கருத்துதான் என்று விட்டு விடலாமா? உடனே, "பாருங்கள் தமிழ் நாட்டில்  சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது" என்பார் அண்ணாமலை. "அதனால் ஆட்சியைக் கலைக்க வேண்டும்" என்பார் சு.சாமி. நமக்குத் தெரியும், இவர்கள் அனைவரும் ஒரே நாடகக் கோஷ்டியின் வெவ்வேறு பாத்திரங்கள்! பாஜக பின்னால் இருக்கும் துணிச்சலில்தான், சீமான் பேச்சில் இவ்வளவு திமிர் வெளிப்படுகிறது. திமிரை அடக்கியே தீர வேண்டும் என காட்டமாக கூறியுள்ளார். 

click me!