உங்கள் விருப்பம் ஈடேறாது.. நீங்கள் யாருடைய ரப்பர் ஸ்டாம்ப்னு எல்லாருக்கும் தெரியும்.. ஆளுநருக்கு சு.வெ. பதிலடி

By vinoth kumar  |  First Published Nov 17, 2022, 3:25 PM IST

கடந்த பல மாதங்களாகவே ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், திமுக அரசுக்கும் இடையேயான மோதல்போக்கு நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இதன் காரணமாக தமிழக ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவர் கடிதம் அனுப்பி உள்ளனர். 


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை ரப்பர் ஸ்டாம்ப் ஆக்கும் ஆளுநர் விருப்பம் ஈடேறாது என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

கடந்த பல மாதங்களாகவே ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், திமுக அரசுக்கும் இடையேயான மோதல்போக்கு நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இதன் காரணமாக தமிழக ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவர் கடிதம் அனுப்பி உள்ளனர். இந்நிலையில், லோக் ஆயுக்தா தினத்தையொட்டி கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி;- ஆளுநர் என்ன செய்யவேண்டும். என்ன செய்யக்கூடாது என்று அனைத்து வகையான குரல்களும் ஒலிக்கப்படுகின்றன. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- தலையில்லாத முண்டமாக அதிமுக..! இபிஎஸ் உடன் அமமுக கூட்டணி என எங்கும் சொன்னதில்லை- டிடிவி தினகரன் ஆவேசம்

லோக் ஆயுக்தா போன்ற அமைப்புகளை வலுவிழக்கச்செய்யும் வகையில் திருத்தங்கள் மேற்கொண்டு வரப்படும்போது பங்காற்றுவதற்கு ஆளுநர்களுக்குப் பொறுப்பு இருக்கிறது.  ஆளுநர்கள் அதில் முடிவெடுக்கவேண்டும். ஏனென்றால் ஆளுநர்கள் ரப்பர் ஸ்டாம்புகள் அல்ல என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருந்தார். ஆளுநரின் இந்த பேச்சு சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார். 

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- ஆளுநர் ரவி உங்கள் ஆசையெல்லாம் அரசியல் சாசனம் ஆகி விடாது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை ரப்பர் ஸ்டாம்ப் ஆக்கும் உங்கள் விருப்பம் ஈடேறாது.

திராவிடர் ஒரு மரபினம் அல்ல, என்று சொல்லும் போதே நீங்கள் யாருடைய ரப்பர் ஸ்டாம்பை குத்த நினைக்கிறீர்கள் என்பதை தமிழகம் அறியும் என சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க;- விவசாயிகளுக்கான அரசு என வாய்கிழிய பேசும் இபிஎஸ்.. விளம்பரத்திற்காக இப்படி பேசுவீங்களா.. செல்வப்பெருந்தகை..!

click me!