நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த யூடியூப்பர் சவுக்கு சங்கரை உச்சநீதிமன்றம் விடுவித்த நிலையில் தமிழக அரசு சார்பாக பதியப்பட்ட மேலும் 4 வழக்குகளிலும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
நீதித்துறை அவமதித்து கருத்து
நீதித்துறை மற்றும் நீதிபதிகள் தொடர்பாக அவதூறு கருத்து கூறிய விமர்சகர் சவுக்கு சங்கருக்கு எதிராக நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்ய மதுரை உயர்நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டார். அதன்படி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்டு வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. அதில் தான் கூறிய கருத்துக்களில் இருந்து பின்வாங்க மறுத்ததை தொடர்ந்து சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது, மேலும் நீதித்துறை மீது டுவிட்டர் மற்றும் யூடியூப்-ல் பதிவு சவுக்கு சங்கர் பதிவு செய்த அவதூறு கருத்துக்கள் மற்றும் வீடியோக்களையும் நீக்கம் செய்யவும் உத்தரவிட்டது.
எம்எல்ஏ ரூபி மனோகரனுக்கு நோட்டீஸ்..! விளக்கம் அளிக்க காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு உத்தரவு
சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறை
இதனையடுத்து முதலில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கர் கடலூர் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். 6 மாதி சிறை தண்டனை உத்தரவுக்கு எதிராக சவுக்கு சங்கர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மனு நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்துக்களையும், மனுதாரரின் தண்டனையையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள் எங்களை விமர்சிக்காதீர்கள் என கூறவில்லை ஆனால் அதற்கு என ஒரு வரைமுறை உள்ளது. எந்தவிதமான ஆதாரங்களும் இல்லாமல் எப்படி இத்தகைய குற்றச்சாட்டுகளை முன் வைத்தார் ? என கேள்வி எழுப்பினார்.
தண்டனைக்கு இடைக்கால தடை
இதனை தொடர்த்து சவுக்கு சங்கர் தரப்பில், நீதித்துறை மீதான கருத்துக்கள் பல சமயங்களில் பல்வேறு தரப்பினர் பேசியதையே சவுக்கு சங்கர் சுட்டிக்காட்டியதாகவும் குறிப்பிடப்பட்டது. எனவே, தற்போதைய நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது. இதனையடுத்து சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர், மேலும், இந்த இடைப்பட்ட காலத்தில் சவுக்கு சங்கர் இந்த வழக்கு தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கக் கூடாது, நீதித்துறை தொடர்பாக வீடியோ பதிவும், கருத்தும் பதிவிடக்கூடாது எனவும் நிபந்தனை விதித்தனர். இதனையடுத்து சிறையில் இருந்து சவுக்கு சங்கர் வெளியாகுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4அவதூறு வழக்கின் கீழ் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இதன் காரணமாக சிறையில் இருந்து வெளிவர வாய்ப்பு இல்லாத நிலை நீடித்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்து.. பாஜக நிர்வாகிக்கு கடிவாளம் போட்ட நீதிமன்றம்..!
எழும்பூர் நீதிமன்றம் ஜாமின்
சவுக்கு சங்கர் மீதான 4 வழக்குகளுக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அந்த 4 வழக்குகளிலும் இருந்து சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து இன்று மாலையோ அல்லது நாளை காலையோ சிறையில் இருந்து சவுக்கு சங்கர் வெளியாக இருப்பதாக தகவல் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்