அதிமுக மெகா கூட்டணி அமைத்தாலும், தினகரன் 1 சதவீதம் கூட இடம்பெற வாய்ப்பு இல்லையென எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்த நிலையில் அதிமுக தலையில்லா முண்டமாக இருப்பதாக டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
அதிமுக- ஒற்றை தலைமை மோதல்
அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஏற்பட்ட குழப்பம் சுமார் 6 வருடங்கள் கடந்த பிறகும் தொடர்ந்து கொண்டே உள்ளது. அந்த வகையில் 3 பிரிவாக பிளவுபட்டுள்ள அதிமுக ஒருவர் மீது ஒருவர் மாறி, மாறி புகார் தெரிவித்து வருகின்றனர். திமுகவை வீழ்த்த நாடாளுமன்ற தேர்தலுக்காக மெகா கூட்டணி அமைக்க இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இதற்க்கு பதில் அளித்த டிடிவி தினகரன் அந்த கூட்டணியில் தானும் இணைய தயார் என்று கூறியிருந்தார்.
இதற்க்கு பதிலடி கொடுத்த இபிஎஸ் அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரனை சேர்க்க முடியாதென்றும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக மெகா கூட்டணி அமைத்தாலும், தினகரன் 1 சதவீதம் கூட இடம்பெற வாய்ப்பு இல்லையென கூறியிருந்தார். இந்தநிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், அதிமுக செயல்படாத கட்சியாக உள்ளதுயென்றும் அந்த கட்சியுடன் 0.25% கூட இணைய வாய்ப்பே இல்லையென தெரிவித்தார்.
அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரனை சேர்க்க முடியாது... எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!!
இபிஎஸ் விரக்தியின் உச்சத்தில் உள்ளதாகவும், ஜெயலலிதாவின் தொண்டர்கள் அவரிடம் இல்லையென கூறினார். அதிமுகவின் தலைமையே யார் என தெரியாத நிலையில் தனது தலைமையில் மெகா கூட்டணி என எடப்பாடி பழனிசாமி கூறிவருவதாக விமர்சித்தார். ஒரு கட்சி பெரிய கட்சியாக இருந்தாலும் சரி, சின்ன கட்சியாக இருந்தாலும் சரி இடைத்தேர்தல் வரும்போது கட்சி வேட்பாளர்களுக்கு சின்னம் கொடுக்கும் இடத்தில் இருக்க வேண்டும். அங்கு அந்த இடத்தில் யார் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லையென குறிப்பிட்டார்.
பதவிக்காக எடப்பாடி பழனிச்சாமியை போல் காலையும் பிடிக்கமாட்டேன்; கழுத்தையும் பிடிக்கமாட்டேன் என தெரிவித்தார். திமுகவை வீழ்த்த ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைய வேண்டும் என கேட்டுக்கொண்ட டிடிவி தினகரன் வாய்ப்பு கிடைத்தால் ஓபிஎஸ்-ஐ சந்திக்க தயாராக உள்ளதாகவும் கூறினார்.
இதையும் படியுங்கள்
அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்து.. பாஜக நிர்வாகிக்கு கடிவாளம் போட்ட நீதிமன்றம்..!