பேரிடர் காலத்தில் சமூகவலைதளத்தில் தவறான தகவல் வெளியிட்டால் கடுமையான நடவடிக்கை . ஆர் பி உதயகுமார் எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Nov 18, 2020, 11:42 AM IST
Highlights

மேலும், உள்நோக்கத்தோடு சமூக வளைதளங்களில் வெளியிடும் தகவல்கள் அதிகாரப்பூர்வமான தகவல்கள் அல்ல என குறிப்பிட்ட அவர், சமூக வலைதளங்களில் பேரிடர் காலத்தில் உள்நோக்கத்தோடு தவறான தகவல்களை வெளியிடுகிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

சமூக வலைதளங்களில் பேரிடர் காலத்தில் உள்நோக்கத்தோடு தவறான தகவல்களை வெளியிடுகிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை விடுத்தார். சென்னை எழிலகம் வளாகத்தில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர். வடகிழக்கு பருவ மழை நீரை சேமித்து வைப்பதற்கும், உபரி நீரை வெளியேற்றவும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், 
36 மாவட்டங்கள் மற்றும் சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் அதிகாரிகள் நியமனம் செய்து ஆய்வு மேற்கிண்டு வருகின்றனர் என்றும் கூறினார். 

மேலும், உள்நோக்கத்தோடு சமூக வளைதளங்களில் வெளியிடும் தகவல்கள் அதிகாரப்பூர்வமான தகவல்கள் அல்ல என குறிப்பிட்ட அவர், சமூக வலைதளங்களில் பேரிடர் காலத்தில் உள்நோக்கத்தோடு தவறான தகவல்களை வெளியிடுகிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.தொடர்ந்து பேசிய அவர், 14,144 ஏரிகளில், 100% நீர் முழு கொள்ளவு 779 ஏரிகளில் எட்டியுள்ளதாகவும், உபரி நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும்,  24 மணி நேரமும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பாசன ஏரிகள் 9521 ஏரிகளில் 714 ஏரிகள் 100% முழு கொள்ளளவு எட்டியுள்ளது என்றும் தெரிவித்தார். 

ஸ்ரீபெரும்பத்தூர் ஏரி 87% நிரம்பியுள்ளதாக கூறிய அவர்,செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும் போது அடையாரு ஆற்றில் குறைந்த அளவு நீர் மட்டுமே வெளியேற்றப்படும் சூழல் தற்போது உள்ளதாகவும், மணிமங்கலம், சோமனூர் ஆகிய இடங்களில் தண்ணீர் அதிகமானாலும் அனைத்து சூழலையும் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என்றும், இதற்கு போதுமான ஒத்துழைப்பை பொதுமக்கள் வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் நேற்று மழை நீர் தேங்கியது அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்ணீர் வடிந்துள்ளதாகவும், மறைமலைநகர் பகுதிகளிலும் மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் எனவே மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் கேட்டுக்கொண்டார். 

உயிரிழப்பு இல்லாத பேரிடரை எதிர்கொள்ள வேண்டும் என்பதே அரசின் நிலை என கூறிய அவர், உயிரிழப்புகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாகவும்,அறிக்கையின் அடிப்படையில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்
.

click me!