அந்த ஆறுபடை முருகன் என் உயிரை காப்பாத்திட்டான்.. என் கணவர் முருகன் மீது வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை- குஷ்பு

Published : Nov 18, 2020, 11:22 AM IST
அந்த ஆறுபடை முருகன் என் உயிரை காப்பாத்திட்டான்.. என் கணவர் முருகன் மீது வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை- குஷ்பு

சுருக்கம்

எந்தத் தடையுமின்றி தனது பயணத்தை தொடர்வதாகவும் அவர் கூறியுள்ளார். தனது பயணத்தை எதுவும் தடுக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். 

தமிழ் கடவுள் முருகனின் கருணையால் உயிர் தப்பினேன் என்வும், தன் கணவர் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கை பொய்யாகவில்லை எனவும் சாலை விபத்திலிருந்து உயிர் தப்பிய நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். தமிழக பாஜக பலதடைகளையும் தாண்டி வேல் யாத்திரையை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. அதில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து கடலூருக்கு நடிகை குஷ்பு இன்று காலை காரில் புறப்பட்டு சென்றார். அப்போது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நடிகை குஷ்பு சென்ற கார் முன்னால் சென்று கொண்டிருந்த கண்டைனர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். அதாவது மதுராந்தகம் அருகே கார் சென்றபோது பாண்டிச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி  நடிகை குஷ்புவின் காரை முந்திச் செல்ல  முயன்றது. அப்போது குஷ்பு சென்ற கார் மீது கண்டெய்னர் லேசாக உரசியது. இந்த விபத்தில் காரின் பின்புற கதவு (பக்கவாட்டில்) பலத்த சேதம் அடைந்தது. காரின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. அதில் குஷ்புக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இது குறித்து ட்விட் செய்துள்ள நடிகை குஷ்பு, தனது கணவர் வணங்கும் கடவுள் முருகன் அருளினால் விபத்தில் இருந்து தப்பியதாக கூறியுள்ளார். முருகனின் அருளால் விபத்தில் இருந்து தப்பியதாகவும் கூறி அவர், விபத்தில் கார் சேதமடைந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆனால் எந்தத் தடையுமின்றி தனது பயணத்தை தொடர்வதாகவும் அவர் கூறியுள்ளார். தனது பயணத்தை எதுவும் தடுக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தனக்கு விபத்து ஏற்பட்டதை அறிந்து தன்னை நலம் விசாரித்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த கண்டெய்னர் லாரி எங்கிருந்து வந்தது, என்பது குறித்து டிரைவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

பாஜக வெற்றி..! மதச்சார்பின்மையை நம்புபவர்களுக்கு கவலை அளிக்கிறது.. பினராயி விஜயன் கடும் வேதனை..!
தற்குறி.. ஒத்தைக்கு ஒத்தை வாடா.... தரை லோக்கலா அடித்து கொள்ளும் சாட்டை - நாஞ்சில் சம்பத்