அண்ணாமலையை மிரட்டுவதை நிறுத்துங்க.. திமுகவினரை கோமாளிகள் என பங்கம் செய்த அர்ஜுன் சம்பத்.

By Ezhilarasan BabuFirst Published Mar 31, 2022, 10:43 AM IST
Highlights

மொத்தத்தில் இவர்கள் வண்ண கோமாளிகள் என்பது மக்களுக்கு தெரியும். ஆர். எஸ் பாரதி நோட்டீஸ் அனுப்பப்படும் என்கிறார். அவர் திமுகவில் குடும்ப விசுவாசி, எதை வேண்டுமானாலும் அவர் பேசுவார். மொத்தத்தில் முதலமைச்சரின் டெல்லி பயணம் தமிழகத்தின் வளர்ச்சிக்கானதாக இருக்க வேண்டும். மத்திய மாநில அரசுகளின் உறவு சுமுகமாக இருக்க வேண்டும். 

முதலமைச்சரின் துபாய் பயணம் குறித்து அண்ணாமலை எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் அவரை மிரட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இவர்கள் வண்ண கோமாளிகள் என்று மக்களுக்கு தெரியும் என திமுகவினரை அர்ஜுன் சம்பத் விமர்சித்துள்ளார். இது திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பு ஏற்படுத்தி உள்ளது. 

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜகவுக்கும்-அதிமுகவுக்கும் இடையே மோதல் பன்மடங்கு அதிகரித்துள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான ஊழல்  குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். குறிப்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அவரின் குற்றச்சாட்டுகள் தொடர்கிறது. தன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரத்தை வெளியிட வேண்டும் என அமைச்சர் செந்தில்பாலாஜி பலமுறை வலியுறுத்தியும் அண்ணாமலை ஆதாரங்களை வெளியிடவில்லை. இது ஒருபுறமிருக்க தமிழக முதலமைச்சரின் துபாய் பயணத்தை அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். ஊழல் செய்த 5 ஆயிரம் கோடி ரூபாயை துபாயில் முதலீடு செய்யவே முதலமைச்சர் பயணம் மேற்கொண்டதாகவும், தனது குடும்பத்தை பெருக்குவதற்காக பயணம் அது என்றும் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அண்ணாமலைக்கு எதிராக 100 கோடி ரூபாய் அபராதம் கேட்டு திமுக சார்பில் மான நஷ்ட ஈடு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  இந்து மக்கள் கட்சி சார்பில் நாட்டின் எல்லைகளில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், சீனா மற்றும் பர்மா எல்லைகளில் இந்திய தேசியக் கொடியை ஏற்றிவைத்த அர்ஜுன் சம்பத் சென்னை திரும்பினார்.  இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:- தமிழக முதலமைச்சர் துபாய்க்கு அரசு முறை பயணம் சென்றிருந்தார் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு என அவர் கூறியிருந்தார். ஆனால் இதன் பின்னணியில் குடும்ப வளர்ச்சி, குடும்பத் தொழில் வளர்ச்சி இருக்கிறது. இதுபற்றி பாஜக தலைவர் அண்ணாமலை கேட்ட கேள்விக்கு உரிய பதில் அளிக்காமல் அவதூறு வழக்குப் போடுவோம் என அவரை மிரட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மொத்தத்தில் இவர்கள் வண்ண கோமாளிகள் என்பது மக்களுக்கு தெரியும். ஆர். எஸ் பாரதி நோட்டீஸ் அனுப்பப்படும் என்கிறார். அவர் திமுகவில் குடும்ப விசுவாசி, எதை வேண்டுமானாலும் அவர் பேசுவார். மொத்தத்தில் முதலமைச்சரின் டெல்லி பயணம் தமிழகத்தின் வளர்ச்சிக்கானதாக இருக்க வேண்டும். மத்திய மாநில அரசுகளின் உறவு சுமுகமாக இருக்க வேண்டும். அவரின் டெல்லி பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள். எட்டு வழி சாலை, கல்வி வேலை வாய்ப்பு நதிநீர் திட்டம் போன்ற மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்ற பிரதமரை சந்திக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு வழிபாட்டு தலங்களை நிர்வகிக்க வக்பு வாரியம் இருப்பதுபோல, கிறிஸ்தவ தேவாலயங்களை பாதிரியார்கள் நிர்வாகம் செய்வது போல, இந்துக் கோயில்களை இந்துக்களே நிர்வகிக்க வேண்டும். இதில் அமைச்சர் தலையிட முடியாது, கோவில் நிர்வாகத்திலிருந்து அறநிலைத்துறை வெளியேறவேண்டும். சேகர்பாபு இறைநம்பிக்கையாளர் கோவில்களில் பக்தர்களின் வசதி பயன்படுத்த வேண்டும் இவ்வாறு அவர் கூறினார். 

 

click me!