ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதிய மாணவிகள்..! தேர்வு மைய அதிகாரிகளை பணி இடை நீக்கம் செய்த பள்ளிகல்வி துறை?

By Ajmal KhanFirst Published Mar 31, 2022, 10:30 AM IST
Highlights

ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத மாணவிகளுக்கு அனுமதி அளித்த தேர்வு மைய அதிகாரிகளை பள்ளிக்கல்விதுறை  பணி இடை நீக்கம் செய்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

ஹிஜாய் அணிய எதிர்ப்பு

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து  பள்ளி மற்றும் கல்லூரிக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தினர். இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளி மற்றும் கல்லூரிக்கு  வந்தால் பதிலுக்கு காவி துண்டு அணிந்து வந்து ஒரு சில மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக கர்நாடாக மாநிலம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டம் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிக்கும் பரவியிது இதனால் அந்த மாநிலத்தில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து ஹிஜாப் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் பள்ளிகள்  மற்றும் கல்லூரிகளின் வகுப்பறையினுள் ஹிஜாப் அணிவதற்கு கர்நாடக மாநில கல்வித்துறை தடைவிதித்தது  செல்லும் என கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

மத அடையாளங்களுக்கு அனுமதி மறுப்பு

 இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளின் போது ஹிஜாப் அணிந்து வர கல்வித்துறை அனுமதி மறுத்து இருந்தது. இதனால் பள்ளிகளில் நடைபெற்ற பல்வேறு தேர்வுகளை இஸ்லாமிய மாணவிகள் புறக்கணித்து இருந்தனர். இதே போல கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதாத நிலை இருந்தது. இருந்த போதும் ஒரு சில தேர்வு மையங்களில் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து கர்நாடாகாவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை தேர்வு எழுத அனுமதித்த 8 தேர்வுத்துறை அதிகாரிகளை கர்நாடக மாநில கல்வித்துறை சஸ்பெண்ட் செய்துள்ளது. 

ஆசியர்கள் சஸ்பெண்ட்

ஏற்கனவே 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதாத நிலையில் தற்போது ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை தேர்வு எழுத அனுமதித்தற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கலபுரகி மாவட்டத்தில் உள்ள அரசு உருது பள்ளியில் ஹிஜாப் அணிந்து வந்து மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். இதனால் அந்த பள்ளி ஆசிரியர் முகமது அலியை மாவட்ட கல்வி அதிகாரி பணி இடை நீக்கம் செய்துள்ளார்.
 

click me!