கல்வீசி தாக்கும் கல்லூரி மாணவர்கள்... ரணகளமாகும் தர்பார் ஷூட்டிங் ஸ்பாட்..!

Published : May 03, 2019, 03:02 PM IST
கல்வீசி தாக்கும் கல்லூரி மாணவர்கள்... ரணகளமாகும் தர்பார் ஷூட்டிங் ஸ்பாட்..!

சுருக்கம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் தர்பார் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி ரஜினியை டென்ஷனாக்கி வருகிறது.   

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் தர்பார் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி ரஜினியை டென்ஷனாக்கி வருகிறது.

இதை தடுக்க என்ன செய்யலாம் என்று படக்குழு மண்டையை போட்டு உடைத்துக் கொண்டாலும் வழியே தெரியவில்லை. காரணம் தர்பார் படப்பிடிப்பு நடக்கும் இடம் ஒரு கல்லூரி. பல ஆயிரம் மாணவர்கள் படிக்கிற இடம் என்பதால் அங்கே யார் எப்படி படங்களை எடுக்கிறார்கள் என்றெல்லாம் ஆள் போட்டு பார்க்க முடியாத நிலை. ஜிம் பாய்ஸ் எல்லாம் அங்கே எடுபடவில்லை. வேறு வழியில்லாமல் நிர்வாகத்திடம் சொல்லி மாணவர்களுக்கு கெடுபிடிகள் கொடுத்து இருக்கிறார்கள். 

இதனால் கடுப்பான மாணவர்கள் முகத்தில் கர்ச்சீப் கட்டிக்கொண்டு கல்லூரி மாடிகளில் இருந்து கல் அடிக்கிறார்களாம். இதைப்பார்த்து ரஜினி, நயன்தாரா உட்பட படக்குழு கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறது. குறிப்பாக ரஜினிகாந்த் பயங்கர அப்செட் ஆகியிருக்கிறாராம் இயக்குனர் முருகதாசிடம் ‘பேசாமல் ஷூட்டிங் ஸ்பாட்டை மாத்திட்டா நல்லது என நச்சரித்து வருகிறாராம் ரஜினி..!

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!