’ஏலத்தில் தமிழக முதல்வர் பதவி...’ எடப்பாடியை அதிர வைக்கும் பழனிசாமி..!

Published : May 03, 2019, 02:17 PM IST
’ஏலத்தில் தமிழக முதல்வர் பதவி...’ எடப்பாடியை அதிர வைக்கும் பழனிசாமி..!

சுருக்கம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, தமிழகத்தில் முதல்வர் பதவி ஏலம் போடப்பட்டது போல் உலகத்தில் எங்கும் நடந்ததில்லை என்று, திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி பேசினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, தமிழகத்தில் முதல்வர் பதவி ஏலம் போடப்பட்டது போல் உலகத்தில் எங்கும் நடந்ததில்லை என்று, திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி பேசினார்.

சூலூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் பழனிச்சாமி சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ’’தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. உள்ளாட்சி தேர்தலை கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடத்தவில்லை. எதிர்கட்சியினர் அதிக இடங்களில் வெற்றி பெறுவார்கள் என்ற அச்சம் தான் காரணம்.

13 மாநகராட்சிகள், அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டால் திமுக அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவது உறுதி. திமுக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் அமைச்சர்கள் டம்மி ஆகிவிடுவார்கள். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஏழைகளின் தங்க நகை கடன் 5 சவரன் வரை தள்ளுபடி செய்யப்படும். கேஸ் சிலிண்டர் விலை பழைய நிலைக்கு வரும். கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்படும், ஆனைமலையாறு- நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும்.

தமிழக முதல்வர் பதவி, எடப்பாடி பழனிச்சாமிக்காக வழங்கப்படவில்லை. ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, தமிழகத்தில் முதல்வர் பதவி ஏலம் போடப்பட்டது. இது போல் உலகத்தில் எங்கும் நடந்ததில்லை’’ என அவர் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!