ஒன்லி மெயின் கோர்ஸ்..! நோ சைடிஸ்..! துக்கடா கட்சிகளை ஏமாற்றிய ஸ்டெர்லைட்..!

By Selva KathirFirst Published Apr 27, 2021, 9:57 AM IST
Highlights

ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தி விவகாரத்தில் வேதாந்தாவிற்கு ஆதரவாக அதிமுக, திமுக என முக்கிய கட்சிகள் அனைத்து ஒரே நிலைப்பாட்டை எடுத்த நிலையில் ஒரு சில துக்கடா கட்சிகள் மட்டும் எதிர் நிலைப்பாட்டை எடுத்துள்ளன.

ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தி விவகாரத்தில் வேதாந்தாவிற்கு ஆதரவாக அதிமுக, திமுக என முக்கிய கட்சிகள் அனைத்து ஒரே நிலைப்பாட்டை எடுத்த நிலையில் ஒரு சில துக்கடா கட்சிகள் மட்டும் எதிர் நிலைப்பாட்டை எடுத்துள்ளன.

தமிழகத்தில் தற்போது காபந்து அரசு தான் செயல்பாட்டில் உள்ளது. விரைவில் வாக்கு எண்ணிக்கை முடிந்து புதிய அரசு பதவி ஏற்க உள்ளது. ஆனால் காபந்து அரசு அவசர அவரசமாக ஒரு அனைத்து கட்சி கூட்டத்தை ஏற்பாடு செய்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய நிர்பந்தமோ, நெருக்கடியோ இல்லாத நிலையில் திமுக கலந்து கொண்டது. மேலும் பாமக, பாஜக, இடதுசாரிக்கட்சிகளும் கூட்டத்தில் பங்கேற்றன. இந்த கூட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்கு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு அதிமுக, திமுக, பாமக, பாஜக ஏன் இடதுசாரிகள் கூட ஆதரவு தெரிவித்தன. ஆனால் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் போன்ற சிறிய கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அனைத்து கட்சி கூட்டம் முடியும் வரை காத்திருந்த இந்தகட்சிகள் அதன் பிறகு வெளியிட்ட அறிக்கை தான் படு சூடானாவை. நாம் தமிழர் கட்சி கொடுத்துள்ள அறிக்கை எல்லாம் வேறு ரகத்தில் உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி என்பதை எல்லாம் விட அனைத்து கட்சி கூட்டத்திற்கு தங்களை அழைக்கவில்லை என்பது தான் சீமானின் கோபத்திற்கு காரணம் என்று தெரிவிக்கும் வகையில் இருந்தது அறிக்கை.

இதே போல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் வெளியிட்ட அறிக்கையும், மிகவும் காட்டமாக இருந்தது. பெரும் கட்சிகள் எல்லாம் அமைதியாகிவிட்ட நிலையில் சிறு கட்சிகள் இப்படி போர்க்கோலம் பூண காரணம் என்ன என்பது குறித்து விசாரிக்கப்பட்டது. தேர்தலுக்கு முன்பிருந்தே வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட்டை மறுபடியும் இயக்குவதற்கான முஸ்தீபுகளில் இறங்கியதாக சொல்கிறார்கள். இந்த சூழலில் தான் நாட்டில்ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனை பயன்படுத்திக் கொள்ள நினைத்த வேதாந்தா அதற்காக தொடர்புடையவர்களை அணுகியதாக சொல்கிறார்கள்.

ஸ்டெர்லைட் திறப்பிற்கு யார் யாரெல்லாம் எதிர்ப்பார்கள் அவர்களில் பலம் வாய்ந்தவர்கள் யார் என்கிற பட்டியல் தயார் செய்யப்பட்டு வேதாந்தா தரப்பில் இருந்து அவர்களை மட்டும் அணுகியுள்ளனர். அப்படி வேதாந்தா யாரை எல்லாம் அணுகவில்லையோ அவர்கள் தான் தற்போது எதிர்ப்பு தெரிவிப்பதாக சொல்கிறார்கள்.

click me!