மாணவர்கள் இனி யு டியூப்பில் பாடம் படிக்கலாம்….. அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி !!

By Selvanayagam PFirst Published Jan 6, 2019, 7:35 AM IST
Highlights

தமிழகத்தில் சிறந்த சிறந்த ஆசிரியர்களை பாடம் நடத்த வைத்து, அதை படம் பிடித்து, 'யு டியூப்'பில் பதிவேற்றம் செய்ய உள்ளதாகவும், மாணவர்கள் தங்கள் பாடங்களில் சந்தேகம் இருந்தால் யு டியூப்பில் பார்த்து தெரிந்து கொள்ளலாம என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழக சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன் சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்திற்கு நுால்கள் வாங்க, ஆறு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தற்போது அண்ணா நூலகத்தில் ஒரு ஸ்டுடியோவும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதில்,  சிறந்த ஆசிரியர்களை பயன்படுத்தி பாடம் நடத்தி, அதை வீடியோவில் பதிவு செய்து, 'யு டியூப்' வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய, முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அதை பள்ளி மாணவர்கள், தங்கள் மொபைல் போன்களில், பதிவிறக்கம் செய்து படிக்கலாம் என்றும், 'சிடி'யாக வெளியிடவும் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேபோல், ஓலைச்சுவடிகளில் உள்ளதை, புத்தகமாகவும், 'சிடி'யாகவும் வெளியிட, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் . மதுரையில், 5 கோடி ரூபாய் மதிப்பில், தமிழன்னை சிலை அமைக்கப்படவுள்ளது என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஏற்கனவே கல்விக்கென 24 மணி நேர தொலைக்காட்சி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் 21 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

click me!