ராகுல் அவ்ளோபெரிய அப்பாடக்கரில்ல! உசுப்பிவிட்டு பப்புக்கு ஆப்படித்த நய்யாண்டி நாயகன்... கோரஸா ஆமாம் போட்ட திமுக தலைகள்

By Vishnu PriyaFirst Published Jan 5, 2019, 6:53 PM IST
Highlights

ஜனவரி மாதம் பிறந்தாலும் பிறந்தது தேசம் முழுக்கவே 2019 நாடாளுமன்ற தேர்தல் பணிகள் டாப்கியர்க்கு மாறிவிட்டன. அதிலும் தமிழகத்தில் அடிச்சு துவைக்க துவங்கிவிட்டன அரசியல் அதிரடிகள். 

ராகுல் அப்படியொன்னும் பெரிய அப்பாடக்கரில்லை!: ஸ்டாலினிடம் தைரியமாக போட்டுடைத்த தி.மு.க. தலைவர்கள். 

ஜனவரி மாதம் பிறந்தாலும் பிறந்தது தேசம் முழுக்கவே 2019 நாடாளுமன்ற தேர்தல் பணிகள் டாப்கியர்க்கு மாறிவிட்டன. அதிலும் தமிழகத்தில் அடிச்சு துவைக்க துவங்கிவிட்டன அரசியல் அதிரடிகள். குறிப்பாக, தி.மு.க. ஃபுல் ஸ்விங்கில் சுழல துவங்கிவிட்டது. 

இந்நிலையில் தன் கட்சி நிர்வாகத்தின் முக்கிய தலைகள் சிலருடன் அறிவாலயத்தில் இன்ஃபார்மலாக ஒரு ஹைலெவல் கூட்டத்தை ஏற்பாடு செய்து நடத்தியிருக்கிறார் ஸ்டாலின். அதில் ‘கூட்டணி நிலவரம் எப்படி அமையுது,  தேசம் தழுவிய இந்த மெகா கூட்டணியில நம்ம நிலைமை எப்படியிருக்குதுன்னு உங்களுக்கே தெரியும். நாம போயிட்டிருக்கிற ரூட்டு சரிதானா? ஓப்பனா சொல்லுங்க.’ என்று கேட்டிருக்கிறார். 

உடனே, ’சூப்பர் தளபதி, நல்லா இருக்குது தளபதி, தட்டிடலாம் தலைவரே!’ என்றுன் பொத்தாம் பொதுவாக பதில்கள் வந்து விழுந்திருக்கின்றன. உடனே டி.ஆர். பாலு, ‘ஏதோ பிசிறடிக்குதே. யார் முகத்திலேயும் உண்மையான ரியாக்‌ஷன் தெரியலையே.’ என்றாராம், ஸ்டாலின் அதிர்ந்து அவரைப் பார்க்க, அடுத்து அமர்ந்து டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த துரைமுருகன் ஸ்டாலினின் தோளை தொட்டு ‘உண்மைதான்! எல்லாரும் பொய் சொல்றாங்க.’ என்றிருக்கிறார். 

ஸ்டாலினுக்கு செம்ம ஷாக். ‘யோவ், இவ்ளோ ஜனநாயகம் கொடுத்து பேச சொல்றேன். ஆனா இப்படி மறைச்சு பேசுறீங்களே!’ என்று  டென்ஷன் காட்டியிருக்கிறார். 

உடனே ஏ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் என்று மெதுவாக தொண்டையை செருமியபடி பேச துவங்கியிருக்கிறார்கள். எல்லோருடைய கருத்துக்களுமே காங்கிரஸை நோக்கியதாகத்தான் இருந்திருக்கிறது. காங்கிரஸை ஸ்டாலின் ஓவராய் தூக்கி வைத்துக் கொண்டாடுவதாகவும், இது முழுக்க முழுக்க சரிதானா? என்று கேட்பதாகவும் இருந்திருக்கிறது. மேற்கு மண்டலத்தை சேர்ந்த ஒரு நிர்வாகி ‘தலைவரே, அவங்களை ரொம்ப நம்பி ரெட்டை இலக்கத்துல சீட் ஒதுக்கிடாதீங்க!’ என்றிருக்கிறார். உடனே ஸ்டாலின், ‘சிங்கிள் டிஜிட்ல ஒதுக்குனா போதுமுன்னு சொல்றீங்களா? இதை ராகுல் ஏத்துப்பாரா?’ என்று கேட்க....மளமளவென பாயிண்டை பிடித்த முக்கிய நிர்வாகிகள்...

“நீங்க ராகுலை ரொம்பவே கொண்டாடுறீங்க தளபதி. அவரு அப்படியொன்னும் ஒர்த் இல்லை. மோடியோட தவறுகளை சுட்டிக்காட்டுறதாலே ராகுல் பெரிய தலைவரா தெரியுறார். ஆனால் அது நாடாளுமன்றத்துக்கு உள்ளே மட்டும்தான். மக்கள் மத்தியில ராகுலுக்கு பெரிய வரவேற்புகள் ஒண்ணும் உருவாகலை. என்னதான் நெகடீவ் விமர்சனத்தை வாங்கி வெச்சிருந்தாலும் மக்கள் மனசுல மோடி முகமும், பெயரும் பசையா ஒட்டித்தான் இருக்குது. கடந்த நாடாளுமன்ற தேர்தல் சமயத்துல நாடு முழுக்க மோடி பிரபலமானதுல நாற்பது சதவீதம் கூட இன்னமும் ராகுல் பதிவாகலை!” என்றிருக்கிறார்கள்.

உடனே, தி.மு.க.வில் நக்கல்! நய்யாண்டிக்கு பெயர் போன ஒரு தலைவர், ‘அப்ப ராகுல் ஒண்ணும் பெரிய அப்பாடக்கர் இல்லைன்னு சொல்றீங்ளா?’ என்று கேட்டதும், ‘ஆமா! ஆமா!’ என்றார்களாம் கோரஸாக. ஸ்டாலினுக்குதான் வருத்தம். தனக்கு புதிதாய் கிடைத்த டெல்லி நட்பை மற்ற கட்சிகள்தான் விமர்சிக்கிறார்கள் என்றால் உட்கட்சியுமா? என்று நொந்திருக்கிறார். 

இந்த தகவல் பப்புவுக்கு தெரியுமா?

click me!