பயமா ? அதிமுகவுக்கா? முறைப்படி அறிவிப்போம்... வேட்பாளர் இழுபறிக்கு பதிலளித்த ஓபிஎஸ்- இபிஎஸ்!

By sathish kFirst Published Jan 5, 2019, 9:15 PM IST
Highlights

அஇதிஅமுக சார்பில் திருவாரூர் இடைத்தேர்தலில்  போட்டியிடும் வேட்பாளார் இன்னும் ஓரிரு தினங்களில் முறைப்படி அறிவிக்கப்படுவார்" கழக  ஒருங்கிணைப்பாளர்  தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர்  முதல்வர் எடப்பாடி பதில்.

எதற்கு அஞ்சாமல் தில்லாக வேட்பாளரை அறிவித்தார் தினகரன், ஒருபக்கம் தேர்தலுக்கு தடைகேட்டு கோர்ட்டுக்கு ஒரு கூட்டத்தை அனுப்பிவிட்டு, அவசர அவசரமாக தங்கள் பங்கிற்கு வேட்பாளரை அறிவியத்தது திமுக. ஆனால் அதிமுகவில் வேட்பாளரை அறிவிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. ’விருப்பமனு கொடுத்த எல்லோர்கிட்டயும் இன்றுதானே பேசியிருக்கோம். இனி கலந்து பேசிய பிறகு வேட்பாளர் யாரு என்பதை முடிவு செய்யலாம். இன்றே அவசரப்பட்டு அறிவிக்க வேண்டாம்...’ என பன்னீர் சொல்ல.. அதை எடப்பாடியும் ஏற்றுக் கொண்டாராம். நாளை அல்லது திங்கள்கிழமை வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும்என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால், திமுக, அமமுக,  திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் பிரச்சாரத்தையும் ஆரம்பித்துவிட்டனர்.

இந்த நிலையில் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணல் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. விருப்ப மனுக்கள் தாக்கல் செய்திருந்த 52பேரில் 45பேரிடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி இருவரும் நேர்காணல் செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், “திருவாரூர் இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படுவார். எப்போது தேர்தல் நடத்தினாலும் அதனை எதிர்கொள்ள அதிமுக தயாராகவே உள்ளது” என்று தெரிவித்தார்.

தேர்தலின்னு சொன்னதுமே டம்மியாக கூட வேட்பாளரை போட்டு முதலில் பணியைத் தொடங்குவது அதிமுகதான். ஆனால், எதிர் கட்சி எதிரி கட்சி என வேட்பாளரை அறிவித்துவிட்ட நிலையில், இந்தத் தாமதத்துக்கு என்ன காரணம் என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, “வேட்புமனு தாக்கல் செய்வதற்கு 10ஆம் தேதி வரை நேரம் இருக்கிறது. கால அவகாசம் இருப்பதால், உரிய நேரத்தில் தலைமைக் கழகம் மூலம் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்” என்று பதிலளித்தார்.

வேட்பாளரை அறிவிக்கவில்லை என்றால் உடனே அச்சப்படுகிறோம் என்று எடுத்துக்கொள்வதா எனக் கேள்வி எழுப்பிய முதல்வர், “எத்தனை தேர்தல் வந்தாலும் அவற்றை சந்திக்க அதிமுக அச்சப்படாது. 

2014க்கு முன்பு ஏற்காடு இடைத் தேர்தல் நடந்தபோது அதில் வெற்றிபெற்று, அதன்பிறகு வந்த மக்களவைத் தேர்தலில் 37 இடங்களில் வென்றோம். அதனால் எப்போதுமே பின்வாங்க மாட்டோம், இடைத் தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறுவோம். திருவாரூர் தேர்தலின் வெற்றி கூறினார்.
 

click me!