பாஜகவில் இருந்து அதிமுகவிற்கு பல்டி அடித்த மாநில நிர்வாகி.! இபிஎஸ் முன்னிலையில் இணைந்ததால் அண்ணாமலை அதிர்ச்சி

By Ajmal KhanFirst Published Mar 31, 2023, 4:04 PM IST
Highlights

பாஜக கல்வியாளர் பிரிவு மாநிலச் செயலாளர் பொன்.கந்தசாமி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைந்துக்கொண்டார்.
 

பாஜக டூ அதிமுக

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டி காரணமாக உள்கட்சி மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் என அடுத்தடுத்த பிளவுகளை அதிமுக சந்தித்து வருகிறது. இந்தநிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுச்செயலாளராக பதவியேற்றுக்கொண்டார். இந்தநிலையில் கூட்டணி கட்சியான பாஜகவின் மூத்த நிர்வாகிகள் ஒன்றன் பின் ஒன்றாக அதிமுகவில் இணைந்து வருகின்றனர். பாஜக ஐடி பிரிவு மாநில தலைவர் சிடிஆர் நிர்மல் குமார், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து விட்டு பாஜகவில் இணைந்தார்.  இதன் காரணமாக பாஜக-அதிமுக இடையே மோதல் ஏற்பட்டது.  திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் எனது தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அண்ணாமலை அறிவித்தார். 

அதிமுகவில இணைந்த மாநில நிர்வாகி

இதனையடுத்து பாஜக தேசிய தலைவர்களை சந்தித்து தனது கருத்தையும் அண்ணாமலை தெரிவித்தார். ஆனால் தேசிய தலைமையோ அதிமுகவுடன் தான் தமிழகத்தில் கூட்டணி அமைக்க இருப்பதாக கூறி திருப்பி அனுப்பியது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பேட்டியளித்த அமித்ஷா தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என கூறினார். இந்தநிலையில் மீண்டும் பாஜகவில் மாநில பொறுப்பில் உள்ளவரை அதிமுக தலைமை தங்கள் அணிக்கு இழுத்துள்ளது. ஏற்கனவே பாஜகவில் இருந்து அதிமுகவில் இணைவதை அந்த கட்சியின் நிர்வாகிகள் ரசிக்கவில்லை. தற்போது பாஜக கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் பொன்.கந்தசாமி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தது பாஜகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படியுங்கள்

புலி வாலை பிடித்த போட்டோவை பார்த்து அசந்து போனேன்..! சட்டப்பேரவையில் செல்லூர் ராஜூவை கலாய்த்த தங்கம் தென்னரசு
 

click me!