
உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல் இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பில், ஆதிதிராவிடர்களுக்கான இட ஒதுக்கீடு முறையாக வழங்கப்படவில்லை என திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்து மீண்டும் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு கடந்த ஆண்டு டிசம்பருக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.
ஆனால், அதுமுதல் இன்றுவரை தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடாமல் மாநில தேர்தல் ஆணையம் இழுத்தடித்து வருகிறது.
இறுதியாக இந்த வழக்கில் கடைசியாக நடந்த விசாரணையின்போது, நவம்பர் 17-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் தேர்தல் தொடர்பான அறிவிப்பை இன்றைக்குள் வெளியிட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் இதுவரை உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடாத தேர்தல் ஆணையம், உயர்நீதிமன்றத்தில் இன்று பதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.
அதில், உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. 1996-ம் ஆண்டு வரையறுக்கப்பட்ட வார்டுகளின் அடிப்படையில் தேர்தலை நடத்துவதா? என்ற குழப்பம் உள்ளதாகவும் இதுதொடர்பாக உயர்நீதிமன்றம் விளக்க வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆகமொத்தத்தில் தேர்தல நடத்துற ஐடியா மட்டும் இல்லங்கிறது தெளிவா புரியுது..(மக்களின் மைண்ட்வாய்ஸ்).