திருமாவை வெளியேற்றிட துடிக்கும் தி.மு.க.!: ராமதாஸை கூல் பண்ணிட ஸ்டாலின் போட்ட அலேக் பிளான்.

By Vishnu PriyaFirst Published Nov 5, 2019, 6:11 PM IST
Highlights

இதைத்தொடர்ந்தே வன்னியர்களும், தலித்களும் அதிகம் வாழும் கடலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் முழு மூச்சாக இந்த பணியை நிறைவேற்றிடும் காரியத்தில் இறங்கியிருக்கிறாராம். நாங்கள் திருமாவை வெளியேற்றிட தயார்!  என்று பா.ம.க.வுக்கு தகவலும் கொடுத்தாகிவிட்டதாம். இதனால் இனி  ஸ்டாலினுக்கு எதிரான ராமதாஸின் தாக்குதல் குறைந்து, ஒரு கட்டத்தில் அந்த வெறுப்பு நீர்ந்தே போகலாமாம். திருமாவுக்கு எதிராக ஸ்டாலின் தரப்பு போடும் இந்த திட்டங்கள் பொய்யே இல்லை! என்பதை கடலூர் மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.வின் வார்த்தைகளை கவனித்தாலே புரியும்! 

கடந்த சில நாட்களாக ஸ்டாலினின் செல்வாக்கு  கிராப் ரொம்பவே டவுனாகிக் கொண்டிருக்கிறது! என்பதே அவரது அரசியலை வழிநடத்தும் ‘ஓ.எம்.ஜி.’ எனும் கன்சல்டன்ஸி டீமின் எச்சரிக்கை ரிப்போர்ட். இதை உடனடியாக நிமிர்த்தியே ஆக வேண்டும்! என்று அலர்ட்டும் செய்துள்ளது அந்த டீம். இதைத்தொடர்ந்து சர்வ சுத்தமாக தன் தரப்பினை மறு பரிசீலனை செய்யும் முயற்சியிலும், களையெடுப்பிலும் இறங்கியுள்ளார் ஸ்டாலின். அதன் ஒரு முகமாக எதிர்வரும் தேர்தல்களில் விடுதலை சிறுத்தைகளை தங்களோடு வைத்திருக்க வேண்டாம்! என நினைக்கிறாராம். காரணம் ”ராமதாஸின் தாறுமாறான தாக்குதல்களால்தான் விக்கிரவாண்டியில் நம் கட்சி தோல்வியடைந்தது. ராமதாஸுக்கு உங்கள் மீது கடும் கோபமிருக்க ஒரே காரணம் திருமாவை நம் கூட்டணியில் வைத்திருந்து இரண்டு லோக்சபா தொகுதிகளை வென்று கொடுத்ததும், அவரை கூடவே வைத்துக் கொண்டு ராமதாஸின் கூட்டணி முடிவை ‘ரோஷமில்லையா! வெட்கமில்லையா?’ என்றுநீங்கள்விமர்சித்ததும்தான். 

திருமா முன்பாக தன்னுடைய சுயமரியாதை சிதைந்துவிட்டதாக நினைக்கிறார் டாக்டர். இதனால்தான் உங்கள் மீது மிக கடுமையான வார்த்தைகளில் விமர்சனங்களை வைக்கிறார். அவரது இலக்கு, வி.சி.க.வின் தோல்விதான். நம் கூட்டணியிலிருந்து திருமாவை எப்படியாவது வெளியேற்றி, தனிமைப்படுத்தி மிக மோசமாக தோற்கடிக்க வேண்டுமென்பதுதான். இதற்கு தோதான சூழலை நாம் உருவாக்கும் வரையில் உங்களைத்தான் அவர் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருப்பார். தலித்களின் நிலமான பஞ்சமி நிலத்தில் நம்  முரசொலி அலுவலகம் இருக்கிறது! என்று ராமதாஸ் ஒரு பிரச்னையை கிளப்பியதெல்லாம், திருமாவை உசுப்பிவிடும் காரியம்தான். அவர் நினைத்தது போலவே திருமாவும் இப்போது பஞ்சமி நிலங்களை தலித் அல்லாத வேறு யாரும்  வைத்திருக்க கூடாது! என்று போதனை நடத்த துவங்கிவிட்டார். 
நம் கூட்டணிக்குள் இருந்து கொண்டே உங்களை உரசும் வகையில் கருத்துச் சொல்லும் திருமாவை கூட்டணியிலிருந்து வெளியேற்றுவதுதான் நமக்கு எல்லா வகையிலும் பயன். 

திருமா வெளியேறிவிட்டால் ராமதாஸ் சாந்தமாகிவிடுவார்.” என்று கட்சியின் வட மாவட்ட முக்கியஸ்தர்கள் ஸ்டாலினுக்கு வகுப்பெடுத்தார்களாம். இதைத்தொடர்ந்து நீண்ட நேரம் யோசித்துவிட்டு ‘சரி, பதமா இந்த வேலையை முடிங்க.’ என்று வி.சி.க.வை வெளியேற்றும் அஸைன்மெண்டுக்கு ஸ்டாலின் க்ரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார். இதைத்தொடர்ந்தே வன்னியர்களும், தலித்களும் அதிகம் வாழும் கடலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் முழு மூச்சாக இந்த பணியை நிறைவேற்றிடும் காரியத்தில் இறங்கியிருக்கிறாராம். நாங்கள் திருமாவை வெளியேற்றிட தயார்!  என்று பா.ம.க.வுக்கு தகவலும் கொடுத்தாகிவிட்டதாம். இதனால் இனி  ஸ்டாலினுக்கு எதிரான ராமதாஸின் தாக்குதல் குறைந்து, ஒரு கட்டத்தில் அந்த வெறுப்பு நீர்ந்தே போகலாமாம். 

திருமாவுக்கு எதிராக ஸ்டாலின் தரப்பு போடும் இந்த திட்டங்கள் பொய்யே இல்லை! என்பதை கடலூர் மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.வின் வார்த்தைகளை கவனித்தாலே புரியும்! என்கிறார்கள் விமர்சகர்கள். திருமாவளவனை வெளியேற்றும் திட்டம் இருக்கிறதா? என்று அரசியல் வார இதழின் சீனியர் நிருபர் ஒருவர் அவரிடம் கேட்டதற்கு “எனக்கு எதுவும் தெரியாது. என்னிடம் எந்த வேலையையும் தலைமை கொடுக்கவில்லை.” என்று சொல்லி ஒதுங்கியிருக்கிறார். ஆக ஏதோ நடக்குது!
 

click me!