ஒரே மேசையில் அமர்ந்து தேனீர் அருந்திய ஸ்டாலின், ஓபிஎஸ்.. ஆளுநர் மாளிகையில் நெகிழ்ச்சி.

Published : May 07, 2021, 11:58 AM ISTUpdated : May 07, 2021, 01:35 PM IST
ஒரே மேசையில் அமர்ந்து தேனீர் அருந்திய ஸ்டாலின், ஓபிஎஸ்.. ஆளுநர் மாளிகையில் நெகிழ்ச்சி.

சுருக்கம்

ராஜ்பவனில் ஆளுநர் அளித்த தேனீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின், ஓபிஎஸ் ஒரே மேசையில் அமர்ந்து தேநீர் அருந்தியுள்ளனர். அவர்களுடன் துரைமுருகன், முன்னாள்  சபாநாயகர் தனபால் ஆகியோர் அருகருகே அமர்ந்து தேனீர் அருந்தினர் . 

ராஜ்பவனில் ஆளுநர் அளித்த தேனீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின், ஓபிஎஸ் ஒரே மேசையில் அமர்ந்து தேநீர் அருந்தியுள்ளனர். அவர்களுடன் துரைமுருகன், முன்னாள்  சபாநாயகர் தனபால் ஆகியோர் அருகருகே அமர்ந்து தேனீர் அருந்தினர். சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது, திமுக 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது. சென்னையில் உள்ள கவர்னர் மாளிகைக்கு புதிய அரசு பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது. 

அதில் திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முன்னதாக அளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது ஸ்டாலின் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் எனக்கூறி பதவி  ஏற்றுக் கொண்டார். ஸ்டாலின்  எதிரில் அமர்ந்திருந்த அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர் வடித்தார். இது அங்கிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல இந்நிகழ்ச்சியில் மு.க அழகிரி மற்றும் அவரது மகன் துரை தயாநிதி அழகிரி ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். 

பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பின்னர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முதல்வராக பதவியேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களுக்கு தேநீர் விருந்து அளித்தார் அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மூக்க ஸ்டாலின் துரைமுருகன் ஓ பன்னீர்செல்வம் முன்னாள் சபாநாயகர் தனபால் அறிவிப்பு முதல்வரும் ஓ பி எஸ் எம் ஒரே மேசையில் அமர்ந்து தேனீர் அருந்தி உள்ளனர் இச்சம்பவம் அதிமுக திமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
 

PREV
click me!

Recommended Stories

ரூ. 1,020 கோடிஊழல்..! அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் கம்பி எண்ணப் போவது உறுதி..! இபிஎஸ் சபதம்..!
நான் மட்டும் உழைத்தால் போதுமா? சாட்டையை கையில் எடுத்த ஸ்டாலின்.. திமுகவினருக்கு அதிரடி உத்தரவு!