முதல்வராக ஸ்டாலின் ஆசை நிறைவேறிவிட்டது.. அடுத்து நம்முடைய ஆசை நிறைவேறப்போகிறது.. அன்புமணி தாறுமாறு கணிப்பு.!

Published : Oct 01, 2021, 08:00 PM IST
முதல்வராக ஸ்டாலின் ஆசை நிறைவேறிவிட்டது.. அடுத்து நம்முடைய ஆசை நிறைவேறப்போகிறது.. அன்புமணி தாறுமாறு கணிப்பு.!

சுருக்கம்

முதல்வராக வேண்டும் என்று ஸ்டாலின் ஆசைப்பட்டார். அவர் ஆசை நிறைவேறிவிட்டது. அடுத்து நம்முடைய ஆசை நிறை வேறப் போகிறது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாமக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி இளைஞரணி தலைவர் அன்புமணி கள்ளக்குறிச்சியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “வன்னியர் சமுதாய மக்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு பெற பாமக எத்தனையோ போராட்டங்களை முன்னெடுத்தது. டாக்டர் ராமதாஸ் இல்லையென்றால் இந்த இட ஒதுக்கீடே கிடைத்திருக்காது.  இட ஒதுக்கீடை கொடுத்தது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதற்கு உறுதுணையாக இருந்தது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். இதையெல்லாம் ஏற்றுக்கொள்கிறோம்.   வன்னியர்களுக்காக மட்டுமல்லாமல் தமிழகத்தில் பின்தங்கிய அனைத்து சமுதாயத்துக்காகவும் பாமக போராடும் என்று உறுதியளிக்கிறேன். 
54 ஆண்டுகளாக திமுக, அதிமுக மாறி மாறி ஆட்சிக்கு வந்துவிட்டன. 54 ஆண்டுகள் திராவிடக் கட்சிகள் ஆண்டது போதும். நாமும் ஆட்சிக்கு வரவே கட்சியைத் தொடங்கினோம். இனி நாம்தான் ஆள வேண்டும். அந்தத் தொடக்கம் இந்த மாவட்டத்திலிருந்து தொடங்கட்டும். இனியும் காத்திருக்காமல் மாற்றத்தை கொண்டு வர உழைக்கத் தொடங்க வேண்டும். இந்த மாற்றம் யாரால் வரும் என்றால், இங்கே இருக்கிற தம்பிகள் மூலமே நிகழும். முதல்வராக வேண்டும் என்று ஸ்டாலின் ஆசைப்பட்டார். அவர் ஆசை நிறைவேறிவிட்டது. 
அடுத்து நம்முடைய ஆசை நிறை வேறப் போகிறது. நம்முடைய அரசியல் வித்தியாசமான அரசியலாக இருக்கும். உங்களுடைய வாழ்க்கையில் மாற்றம் கொண்டு வர பாமக ஆட்சிக்கு வர வேண்டும். நாடாளுமன்றம், சட்டமன்றத்தைவிட உள்ளாட்சி முக்கியமானது." என்று அன்புமணி பேசினார்.
 

PREV
click me!

Recommended Stories

புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!