எம்ஜியாரை பெரியப்பா, சித்தப்பா என உரிமை கொண்டாடினாலும் ஸ்டாலின் முதல்வராக முடியாது.. அமைச்சர் சவுக்கடி..

By Ezhilarasan BabuFirst Published Feb 4, 2021, 10:27 AM IST
Highlights

திமுக ஆட்சிக் காலத்தில் எந்த திட்டமும் கொண்டு வரவில்லை, அதனால்தான் அதிமுக ஆட்சியில் ஊழல் நடக்கிறது என ஸ்டாலின் பொய் கூறிவருகிறார். தேர்தல் நெருங்குவதால்தான் சித்தப்பா எனவும் பெரியப்பா எனவும் எம்ஜிஆரை அவர் உரிமை கொண்டாடி வருகிறார், 

தேர்தல்  நெருங்குவதால் தான் எம்ஜிஆரை சித்தப்பா எனவும் பெரியப்பா எனவும் ஸ்டாலின் உரிமை கொண்டாடி வருகிறார் என அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். மேலும் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க மக்கள் தீர்மானித்து  விட்டனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அதிமுக-திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இரு கட்சிகளும் ஒருவரை மாற்றி ஒருவர் கடுமையாக விமர்சித்தும், தாக்கியும் வருகின்றன. இந்நிலையில் மதுரை கோவில் பாப்பாகுடி பகுதியில் அமைக்கப்பட்ட மக்கள் நல திட்டங்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்சந்தித்த அவர் கூறியதாவது:- 

திமுக ஆட்சிக் காலத்தில் எந்த திட்டமும் கொண்டு வரவில்லை, அதனால்தான் அதிமுக ஆட்சியில் ஊழல் நடக்கிறது என ஸ்டாலின் பொய் கூறிவருகிறார். தேர்தல் நெருங்குவதால்தான் சித்தப்பா எனவும் பெரியப்பா எனவும் எம்ஜிஆரை அவர் உரிமை கொண்டாடி வருகிறார், முரசொலியில் எம்ஜிஆரை இழிவாகவும், வாங்காத கப்பலை வாங்கியதாகவும் எழுதியவர்கள் திமுகவினர். எம்ஜிஆரை திமுக தலைவர் கலைஞர் இழிவாக பேசிய போது எம்ஜிஆர் சித்தப்பா என தெரியவில்லையா, அவரை கட்சியை விட்டு நீக்கும்போது கலைஞரிடம் சித்தப்பாவை நினைக்காதீர்கள் எனக்கூறி ஸ்டாலின் அடம்பிடித்து இருக்கலாமே, எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோது ஸ்டாலின் அவரது கட்சியில் இணைந்து இருக்கலாம்,  அதை எல்லாம் செய்யாமலேயே தேர்தல் நேரத்தில் பெரியப்பா- சித்தப்பா என கூறுகிறார். 

இதுவரை எந்த தலைவருக்கும், யாருக்கும் இல்லாத செல்வாக்கு எம்ஜிஆருக்கு உண்டு,  ஸ்டாலின் மட்டுமில்லை அவரது தந்தையும் ஒரு காலத்தில் இதைச் சொல்லியுள்ளார். எம்ஜிஆரை ஆருயிர் நண்பர் தற்போது அவர் இல்லை என கூறி, என்னை தேர்ந்தெடுங்கள் என கூறியவர் கலைஞர். அவர் வந்த பிறகு ஆட்சியை அவரிடம் கொடுப்பேன் என பேசியுள்ளார். எனவே அப்பாவுக்கு தப்பாமல் பிறந்துள்ளார் ஸ்டாலின், கலைஞரின் பொய்யை நம்பி மக்கள் ஓட்டு போடவில்லை, தற்போது எம்ஜிஆரை பெரியப்பா சித்தப்பா என கூறினாலும் ஸ்டாலின் முதலமைச்சராக முடியாது. ஒருமனதாக மக்கள் எடப்பாடி வரை முதல்வராக தீர்மானித்து விட்டார்கள் இவ்வாறு அவர் பேசினார்.

 

click me!