அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகி நீக்கம்.. சசிகலா வருகையால் ஒன்றுபட்ட ஓபிஎஸ், இபிஎஸ்..!

By vinoth kumarFirst Published Feb 4, 2021, 9:59 AM IST
Highlights

கர்நாடக மாநில அதிமுக செயலாளர் யுவராஜை  கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டாக அறிவித்துள்ளனர். 

கர்நாடக மாநில அதிமுக செயலாளர் யுவராஜை  கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டாக அறிவித்துள்ளனர். 

கொரோனாவில் இருந்து மீண்ட சசிகலா பெங்களூரு அருகே உள்ள தேவனஹள்ளி என்ற பகுதியில் உள்ள சொகுசு தனியார் விடுதியில் ஓய்வு எடுத்து வருகிறார். வரும் 7-ம் தேதி அவர் சென்னை திரும்ப உள்ளார். இந்நிலையில், அதிமுக மாநிலச் செயலாளர் யுவராஜ் மற்றும் கர்நாடக மாநில அமமுக செயலாளர் சம்பத் ஆகியோர் ஒன்றாக அதிமுக கொடி ஏற்றிய ஒரே காரில் சசிகலா ஓய்வெடுத்து வரும் சொகுசு விடுதி முன்பு வந்து இறங்கினர். ஆனால், சசிகலா தனிமையில் இருப்பதால் இருவரையும் சந்திக்க வாய்ப்பு கொடுக்கவில்லை. 

இதனால், அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், கட்சி கட்டுப்பாடுகளை மீறி ஒருவேளை அவர் சசிகலாவை சந்திக்க சென்றது உறுதியானால் அவர் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கும் என புகழேந்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில், யுவராஜ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்;- கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்டுபாடுகளுக்கும் முரணான வகையில் செய்யப்பட்டதாலும் , கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டாதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு  களங்கமும் அவப் பெயரும்  உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த யுவராஜ் (கர்நாடக மாநில கழக செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்க வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இருவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். 

click me!