நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த வழக்கறிஞர் ராஜீவ் காந்திக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த வழக்கறிஞர் ராஜீவ் காந்திக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியில் மாநில ஒருங்கிணைப்பாளராகவும், அக்கட்சியின் ஊடக பிரதிநிதியாகவும் இருந்தவர் ராஜீவ் காந்தி. கட்சியில் ஏற்பட்ட சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அக்கட்சியிலிருந்து ராஜீவ் காந்தி விலகினார்.
இதனையடுத்து, கடந்த ஜனவரி 28-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி இணைந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு திமுகவில் இணைந்த வழக்கறிஞர் ராஜீவ் காந்திக்கு திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளராக பதவி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கழக சட்டதிட்ட விதி 18, 19ன் படி திமுக செய்தி தொடபு இணைச் செயலாளராக வழக்கறிஞர் இரா.ராஜூவ்காந்தியும், துணை செயலாளராக அமுதரசன் ஆகியோர் நியமிக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.