தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்பார்…பூரண மது விலக்கை கொண்டுவருவார்….பிகார் முதலமைச்சர் . நிதிஷ்குமார் அதிரடி பேச்சு…

 
Published : Jun 03, 2017, 08:18 PM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்பார்…பூரண மது விலக்கை கொண்டுவருவார்….பிகார் முதலமைச்சர் . நிதிஷ்குமார் அதிரடி பேச்சு…

சுருக்கம்

stalin will be th CM of tamilnadu...Nitheesh Kumar speech

தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்பார்…பூரண மது விலக்கை கொண்டுவருவார்….பிகார் முதலமைச்சர் . நிதிஷ்குமார் அதிரடி பேச்சு…

திமுக  தலைவர் கருணாநிதிக்கு இன்று 94-வது பிறந்த நாள் ஆகும். அவரது பிறந்த நாள் விழாவும், சட்டமன்றத்தில் அவர் 1957-ம் ஆண்டு முதல் தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக பணியாற்றி வருவதால் சட்டமன்ற வைர விழாவும் இன்று கொண்டாடப்படுகிறது.

கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் மற்றும் சட்டபேரவை வைர விழா பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்றுப் பேசிய பீகார் ஆதலமைச்சர், நிதிஷ்குமார்  கருணாநிதி, இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழ்கிறார் என்று கூறினார் சமூக நீதிக்காக பாடுபட்ட மிகப்பெரிய தலைவர் கருணாநிதி, பிகாரைப் போல் மதுவிலக்கை கொண்டுவருவோம் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் இருந்தது

பூரண மதுவிலக்கால் பிகாரில் விபத்து மற்றும் குற்றங்கள் குறைந்தது உளிட்ட பல்வேறு நன்மைகள் ஏற்பட்டுள்ளது. என்று அவர் தெரிவித்தார்.

 எழுத்து காவியங்கள் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக அரும்பாடுபட்டுள்ளார். கருணாநிதியின் புரட்சிகரமான கருத்துக்கள் இன்றளவும் குடிகொண்டுள்ளன. மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அறிமுகப்படுத்தியவர் கருணாநிதி என்பது மிகவும் பெருமை வாய்ந்ததது என குறிப்பிட்டார்.

பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் வெளிச்சம் பாய்ச்சியவர். அவர் கொண்டுவந்த விதவைகளுக்கு மறுவாழ்வு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் போற்றுதற்குரியது. அகில இந்திய அளவில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அவரைப் போல நீண்ட நெடிய அரசியல் அனுபவம் வாய்ந்த தலைவர் யாருமில்லை.

பெண்களுக்காக பல்வேறு நலப்பணிகளை ஏற்படுத்தியுள்ளார். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு கொடுத்தவர். மிகச்சிறந்த போராளி. 14 வயதில் இருந்து சமூகப்பணியாற்றத் தொடங்கிய கருணாநிதி 94 வயதிலும் அயராது உழைக்கிறார் என்று நிதீஸ்குமார் தெரிவித்தார்.

.கருணாநிதியின் மகனான ஸ்டாலின் பல்வேறு அரசியல் அனுபவங்களை பெற்றுள்ளார். அவர் முதலமைச்சராக  பொறுப்பேற்பார் என்றும். பிகாரைப் போல் தமிழகத்திலும் பூரண மதுவிலக்கை அவர் கொண்டுவருவார் என்றும் . நிதிஷ்குமார் பேசினார். 

PREV
click me!

Recommended Stories

தேவாலயத்திற்குச் சென்று கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் பங்கேற்ற பிரதமர் மோடி..!
தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!