
மத்தியில் நடக்கும் கோமாளித்தனமாக ஆட்சியையும், தமிழகத்தில் நடைபெற்று வரும் ரிமோட் கண்ட்ரோல் ஆட்சியையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தினார்.
திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா மற்றும் சட்டமன்ற வைரவிழா, சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடைபெற்று வருகிறது . இதில் பங்கேற்றுப் பேசிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, காஷ்மீரும் கன்னியாகுமரியும் இங்கு சங்கமித்திருப்பதாக குறிப்பிட்டார்.
தமிழுக்காக தன் வாழ்நாள் முழுவதையும்அர்ப்பணித்து பாடுபட்டு வரும் கருணாநிதிஇ 80 ஆண்டுகள் அரசியலிலும், 60 ஆண்டுகள் எம்எல்ஏ வாகவும், 50 ஆண்டுகள் திமுக தலைவராகவும் விளங்கியவர் என குறிப்பிட்டார்.
எண்மையில் சொல்லப் போனால் கருணாநிதிக்கு மத்திய அரசு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என தெரிவித்தார். அது மட்டுமலலாமல் கலைஞரின் பெயர் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற வேண்டம் என கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தில் தற்போது பொம்மை ஆட்சி நடைபெற்று வருவதாகவும், அதனை ரிமோட் கண்ட்ரோல் மூலம் மத்தியில் ஆளும் சர்வாதிகார பாஜக அரசு இயக்கி வருவதாக தெரிவித்தார். இந்த இரண்டு ஆட்சிகளையும் தூக்கி எறிய வேண்டும் எனவும் நாராயணசாமி வலியுறுத்தினார்.