
எப்போது வேண்டுமானாலும் அமைச்சரவையில் மாற்றம் வரும் என எதிர்பார்த்துக் காத்துக் கிடந்த தினகரனின் விசுவாசிகள் இப்போது ரொம்ப ஹாப்பி மூடில் உள்ளார்களாம்.
இலையை வாங்க லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில் கைதாகி திஹார் சிறையில் இருந்த தினகரன் நிபந்தனை ஜாமீனில் வெளியே தனது ஆட்டத்தை தொடங்கிவிட்டார். சசிகலா குடும்பத்தை கட்சியை விட்டே அவங்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமே இல்லை என ஆளுக்கு ஆள் பேட்டி கொடுத்த வந்தனர்.
ஆனால் அமைச்சர் ஜெய்குமாரோ எங்களுக்கும் அவங்களுக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை என அதிமுக தொண்டர்களை மட்டுமல்ல இருபதுக்கும் மேற்பட்ட சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ, எம்.பிக்களை அதிரை வைத்தார்.
ஆனால் திஹாருக்கு செல்லும் முன் கட்சியை விட்டே ஒதுங்கி விட்டேன் என சொன்ன தினகரனோ இப்போது வெளியே வந்ததும் இப்போது நான் அதிமுக துணை பொதுச்செயலாளராக நீடிக்கிறேன். என்னை யாராலும் கட்சியை விட்டு நீக்க முடியாது. சசிகலாவை சந்தித்து ஆலோசித்த பிறகே கட்சியில் அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என பேட்டி தன்னை எதிர்க்கும் நோக்கம் எண்ணம் உள்ளவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்.
இதுமட்டுமல்ல சசிகலா, தினகரனின் தீவிர விசுவாசிகளான தங்க.தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், இன்பதுரை என மூன்று பேசும் தங்கள் எப்போது வேண்டுமானாலும் அமைச்சரவையில் ஐக்கியமாக்கலாம் என எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கின்றனர்.
இதை உறுதிப்படுத்தும் விதமாக தினகரனின் விசுவாசிகளின் ஒருவரான புகழேந்தியோ வெளிப்படையாக ஜெயக்குமார் உள்ளிட்ட 3 அமைச்சர்களை நீக்க வேண்டும். தினகரன் தொடர்ந்து துணை பொதுச்செயலாளராக செயல்படுவார் என பகிரங்கமாக பேட்டியளித்துள்ளார்.
தினகரன் சிறைக்கு சென்றதும் அணிகள் இணைப்பு என டிராமா போட்டு வந்த அமைச்சர்கள் இப்போது தினகரன் வெளியே வந்ததும் அதே மூன்று அமைச்சர்களும் தினகரனை வரவேற்றுள்ளனர்.
காசுக்காகவும், பதவிக்காகவும் ஒட்டிக்கொண்டிருந்த சில அமைச்சர்களின் முகமூடி கிழிந்துள்ளது. ஆனால் அதே காசுக்காகவும் பதவிக்காகவும் விசுவாசமாக அவரை நம்பியிருந்த சில எம்.எல்.ஏக்களுக்கு ரெம்ப ஹாப்பியாம். சசிகுடும்பத்திற்க்கு விசுவாசமாகவும், தினகரன் மேலுள்ள நம்பிக்கையிலும் வேறு அணிக்கு செல்லாமல் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று நம்பி இருந்தனர்.
ஆனால் தினகரன் சிறையில் இருந்ததால், அமைச்சரவையில் மாற்றம் செய்வதில் மிகுந்த தயக்கம் காட்டினார் எடப்பாடியார். கடந்த ஒரு மாத காலமாக காத்து கிடந்ததற்கு பலனாக நம்மை எப்படியும் தினகரன் அமைச்சராக்கி விடுவார் என்ற நம்பிக்கையில் உள்ளனர். தினகரன் சிறைக்கு சென்றதும் அந்தர் பல்டி அடித்த அந்த மூன்று அமைச்சர்களும் எந்த நேரத்தில் பதவி பறி போகுமோ என அலறலில் உள்ளார்களாம்.