ஸ்டாலினுக்கு மனைவி போட்ட தெறி கட்டளைகள்... அதிர்ந்த தளபதி, ஆச்சரிய உதயநிதி..!

By Vishnu PriyaFirst Published Feb 15, 2019, 11:21 AM IST
Highlights

சமீபகாலமாக ஸ்டாலின் பேசும் பேச்சுகள் மிக கடுமையாக விமர்சனத்துக்கும், வருத்தத்துக்கும் ஆளாகின்றன. ஸ்டாலின் மீது எதிர்கட்சியினரும் மரியாதை வைத்து பழகி வந்த நிலையில் லேசாக சில தடுமாற்றங்கள். இதைத்தொடர்ந்து துர்கா ஸ்டாலின் சில கட்டளைகளைப் போட, அதிர்ந்து போயிருக்கிறார் தளபதி என்கிறது அவரது அலுவலக வட்டாரம். 

சமீபகாலமாக ஸ்டாலின் பேசும் பேச்சுகள் மிக கடுமையாக விமர்சனத்துக்கும், வருத்தத்துக்கும் ஆளாகின்றன. ஸ்டாலின் மீது எதிர்கட்சியினரும் மரியாதை வைத்து பழகி வந்த நிலையில் லேசாக சில தடுமாற்றங்கள். இதைத்தொடர்ந்து துர்கா ஸ்டாலின் சில கட்டளைகளைப் போட, அதிர்ந்து போயிருக்கிறார் தளபதி என்கிறது அவரது அலுவலக வட்டாரம். 

சமீபத்தில் ஒரு இஸ்லாமிய திருமணத்தில் கலந்து கொண்ட ஸ்டாலின், இந்துக்களின் திருமணங்களில் புரோஹிதர்கள் சொல்லும் மந்திரங்களின் அர்த்தம் அவர்களுக்கே புரியாது என்று கிண்டலடித்தார். இது பல கோடி இந்துக்களின் மனதை புண்படுத்தியது, அவரது மனைவி துர்காவையும் சேர்த்து. அடுத்து, தமிழக அரசை ‘இது ஒரு கூலிப்படை அரசு. கொலை, கொள்ளைக்கு ஏற்பாடு செய்து தரப்படும்னு போர்டுதான் இன்னும் வைக்கலை’ என்று சாடினார். 

அரசின் முக்கிய அங்கமான எதிர்கட்சி தலைவரே அரசின் மாண்பை இப்படி கெடுத்துப் பேசுகிறாரே என்று அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் சலசலப்பு உருவானது. ஸ்டாலினை மனதார மதிக்கும் அ.தி.மு.க.வினர் கூட அவரது இந்த பேச்சை ரசிக்கவில்லை. இந்நிலையில் தமிழக பட்ஜெட்டை ‘உதவாக்கரை பட்ஜெட்’ என்று ஒருவிதமாக எடுத்தெறிந்து பேசினார். அதற்கு முன்னதாக உலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பாக ‘ரோட்டில் திரிஞ்சவங்களுக்கு கோட் சூட் மாட்டி உட்கார வெச்சாங்க.’ என்று கடுமையாய் சாடினார். 

இது தொடர்பாக தொழில்துறை அமைச்சர் சம்பத் சட்டசபையில் வெளிப்படையாக வருத்தத்தை கொட்டி ‘சர்வதேச முதலீட்டாளர்களின் மனதை ஸ்டாலின் புண் படுத்திவிட்டார்.’ என்று நொந்தார். ஸ்டாலினின் வார்த்தைகள் வரவர ஷார்ப் ஆகிக் கொண்டே போவதையும், அதற்கு மிக கடுமையான வருத்த விமர்சனங்கள் வெடிப்பதையும் மகன் உதயநிதியும், துர்கா ஸ்டாலினும் கவலையோடு அலசியிருக்கிறார்கள். ’மாமா இருக்கும்போதெல்லாம் இவ்வளவு ஷார்ப்பா உங்கப்பா பேசமாட்டார்.

இப்போ அவர் தோள்ள கடுமையான வேலைப்பளு, பொறுப்பு, பெரிய கூட்டணியை நாடாளுமன்ற தேர்தலில் தலைமைதாங்கி கரை சேர்க்கிற கடமை, இந்த ஆட்சியை நீக்கி ஆட்சியில் உட்கார வேண்டிய அவசியம் இதெல்லாம் சேர்ந்துதான் அவரை இப்படி படபடப்பாக்கி கூர்மையா பேச வைக்குது.’என்று அழகாக பேசி ஸ்டாலினின் கொதி வார்த்தைகளுக்கான காரணத்தை துர்கா விளக்க, உதயநிதி ஆச்சரியப்பட்டு போனாராம். 

அத்தோடு நில்லாமல் ஸ்டாலினிடம் இந்த விஷயங்களை பக்குவமா எடுத்துச் சொல்லி...”முன்னாடியெல்லாம் நீங்க இப்படி இல்லையே! ஆயிரம் கடமைகள், பொறுப்புகள் இருந்தாலும் பக்குவமா அமைதியா பேசுங்க. உங்களோட தனித்தன்மையை எப்பவுமே விட்டுக்கொடுக்காதீங்க, உங்க பெயருக்குன்னு எதிர்கட்சியில கூட தனி மரியாதை இருக்குது. அது எப்பவும் தொடரணும். 

வேலைப்பளுவை கொஞ்சம் குறைங்க, நல்லா தூங்குங்க, யோகா பண்ணுங்க, கொஞ்சம் தனிமையாவும் இருங்க, எதிர்கட்சிகளை பற்றி விமர்சிக்கிறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிங்க. இதுக்கெல்லாம் மேலா இந்து மத நம்பிக்கைகளில் விமர்சனம் வைக்க வேண்டாமே, நான் கூட காயப்பட்டுட்டேன். சொல்லிட்டேன், இனி உங்களோட முடிவு.” என்றாராம். மனைவியின் தெளிவான அரசியல் பாதையையும், நறுக் கட்டளைகளையும் பார்த்து ஷாக் ஆகிவிட்டாராம் தளபதி. துர்கா கிழித்திருக்கும் கோட்டை தாண்டுவாரா? கவனிப்போம்.

click me!