அறிவாலயத்திற்குள் பாமக வந்தால்... திருமாவுக்கு டிமிக்கி!! திமுகவின் அந்தரான ஸ்கெட்ச்!!

By sathish kFirst Published Feb 15, 2019, 10:45 AM IST
Highlights

தமிழக பிஜேபி பொறுப்பாளரான  பியூஷ் கோயல் நேற்று  சென்னை வந்தார். அதிமுகவோடும், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி டீல் பேச வந்துள்ளார்.

அதிமுக அணியில் இடம்பெற்றிருப்பதாகக் சொல்லப்படும் பாமகவின் ரகசிய காய்நகர்த்தல்கள் அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்ல, மேல் மட்டத்திலுள்ள நிர்வாகிகளையே திணற வைத்திருக்கிறது. ஆனால், கூட்டணி பற்றி ஊடகங்கள் பலவிதமாக எழுதுவதாக ராமதாஸ் கோபத்தை கொப்பளித்தார். ஆனால், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு திசைகளில் பாமக நடத்தும் பேச்சுவார்த்தைகள் பாமகவின் கூட்டணி நிலைப்பாடு பற்றிய கேள்விகளையும் எழுப்பியுள்ளன.

இந்த வகையில் கடந்த வாரம் அதிமுகவோடு பாமகவின் டீல் முடிந்துவிட்டது என்று ரகசியத் தகவல் கிடைத்த நிலையில், இன்னொரு பக்கம் திமுகவுக்கும் கூட்டணிக் கதவைத் திறந்தே வைத்திருந்தது பாமக.

பாஜக தமிழகப் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தமிழகம் வருவதற்கு முன்பாகவே, அன்புமணியோடு பேசுவதற்காகத் தொடர்ந்து முயன்றபோதும் கோயல் முயற்சித்தும் அன்புமணி சிக்கவில்லை. தொடர்ந்து முயன்றபோதும் அன்புமணியின் தொடர்பு கிடைக்காததால், அன்புமணிக்கு நெருக்கமான தொழிலதிபர் மூலம் அவரைத் தொடர்புகொண்டார்.

இந்நிலையில் தான் அன்புமணி  ஸ்டாலின் மருமகனான சபரீசன் சந்திப்பு பற்றிய தகவல்கள்  பிஜேபி மேலிடத்துக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அன்புமணியை அவருக்கு நெருக்கமான மேலும் சில நண்பர்கள் மூலம் தொடர்புகொண்ட பிஜேபி மேலிடம், தயவுசெஞ்சி ‘அவசரப்பட்டு எந்த முடிவும்’ எடுக்கவேண்டாம்ன்னு சொல்லி தேர்தலுக்கு கொடுக்கப்படும் சீட் போக  வேறு சில டீல் பேசியதாம் .

அதேநேரம், திமுக தரப்பில் ‘பாமக - தேமுதிக ஆகிய இரு கட்சிகளும் அதிமுக அணியில் இடம்பெற்றால் அது சில தொகுதியில் வெற்றிக்கு வழி வகுக்கும் அதனால், பாமக அல்லது தேமுதிக இரண்டில் ஒரு கட்சியை திமுக அணிக்குள் கொண்டுவர வேண்டும்’ என ஸ்டாலினிடம் சொல்லப்பட்டது. அதில், தேமுதிக வேண்டவே வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறார். அதனால் சாய்சே இல்லாமல்  பாமகவை தூக்கணும்னு முடிவாம். பாமக திமுகவை நோக்கித் திரும்பினால் திமுக அணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் நிலைமை கேள்விக்குறியாகிவிடும்.

அதேபோல, பாமக இருக்கும் அணியில் இடம்பெற மாட்டோம் என்பதைக் கொள்கை முடிவாகவே வைத்திருக்கிறார் திருமா. சில மாதங்களுக்கு முன்  துரைமுருகன் தொலைக்காட்சிப் பேட்டியில், ‘திமுக கூட்டணியில் காங்கிரஸ், முஸ்லிம் லீக் தவிர வேறு யாரும் இல்லை. கடைசி நேரத்தில் வருபவர்களும் உண்டு. எங்களுடனே இருப்பவர்கள் விலகிக் கொள்வதும் உண்டு’ என ஏற்கனவே டிவிஸ்ட் வைத்திருக்கிறார்.

அப்போது திமுக கூட்டணியில் விசிக இருக்கிறதா என்பதை திமுகதான் தெரிவிக்க வேண்டும் என்று திருமா பேட்டியளித்தார். அதன்பின் ஸ்டாலினை சந்தித்தபோது கூட, ‘பாமகவைக் கூட்டணியில் சேர்த்துக்கொள்வது என்பது உங்கள் விருப்பம். உங்கள் முடிவு அதுவாக இருந்தால் நாங்கள் அதற்குத் தடையாக இருக்க மாட்டோம். அதேநேரம் பாமக - பிஜேபி இருக்கும் அணியில் எங்களால் இடம்பெற முடியாது’ என்று நேரடியாகவே சொல்லியிருக்கிறார். அப்போது ஸ்டாலின் அப்படியெல்லாம் எதுவுமே இருக்காது. பாமக, விசிக இரண்டுமே திமுக அணியில் இடம்பெற்றாலும் நல்லது என்று நினைக்கிறார் ஸ்டாலின். 2004 போல நாற்பதுக்கு நாற்பது ஜெயிக்க நல்ல வாய்ப்பிருக்கும் நிலையில் அனைவரையும் ஒருங்கிணைத்து தேர்தலைச் சந்தித்தாலும் நல்லது என்றே நினைக்கிறார் ஸ்டாலின், ஒருவேளை, திமுக அணிக்குள் பாமக வரும் பட்சத்தில், திருமாவை கழட்டி விடவும் தயங்காது திமுக.

click me!