அன்று தண்ணி குடிக்க வைத்த ஸ்டாலின் இன்று டீ குடிக்க சொல்கிறார்.. அறிவாலயத்தில் அழகிரிக்கு நடந்த தரமான சம்பவம்.

By Ezhilarasan BabuFirst Published Jan 28, 2022, 5:58 PM IST
Highlights

இந்நிலையில்தான் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வெளியில் வந்த செய்தியாளர்களை சந்தித்த அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். பேச்சு வார்த்தைக்கு சென்ற தன்னிடம் திமுக தலைவர் ஸ்டாலின் கனிவுடன் நடந்து கொண்டார், காங்கிரஸ் போட்டியிட விரும்பும் இடங்களை திமுக தலைமையிடம் எடுத்துக்கூறி உள்ளேன், தாங்கள் கேட்டுள்ளார் இடங்களை பரிசீலிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக உடன் நடந்த பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சிரித்த முகத்துடன் வெளியில் வந்த அவர் இதனை தெரிவித்துள்ளார். உள்ளே சென்ற தன்னிடம் முதல்வர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் அனுசரணையாக நடந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். 

திமுக காங்கிரஸ் இடையேயான கூட்டணி தேர்தல் கூட்டணி மட்டுமல்ல அது கொள்கை கூட்டணி என்று சொல்லும் அளவிற்கு  இரு கட்சிகளும் பல பத்தாண்டுகளாக இணைந்து பயணித்து வருகின்றன . இந்திராகாந்தி காலம்தொட்டு சோனியா காந்தி வரையிலும் இரு கட்சிகளுக்குமான உறவு இயற்கையான உறவாக இருந்து வருகிறது. திமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்ததை காட்டிலும் காங்கிரஸுடன் அதிகமுறை கூட்டணி அமைத்து பல தேர்தல்களை சந்தித்துள்ளது. அந்த அளவுக்கு  மதச்சார்பின்மை என்ற புள்ளியில் இரு கட்சிகளும்  ஒன்றுபட்டு நிற்பதை அதற்கு காரணம். சில நேரங்களில் இந்த கூட்டணியில் உரசல், கருத்து வேறுபாடுகள், ஊடல் என பல முரண்கள் ஏற்பட்டு மீண்டும் இணைந்து கொள்ளும் நிலையில்தான் இரு கட்சிகளுக்குமான உறவு இருந்து வருகிறது. 

மதவாதம், சனாதனத்திற்கு எதிராக தேர்தல் களத்தில் இருகட்சிகளும் ஒன்றுபட்டு நிற்கின்றன. ஏற்கனவே கூடா நட்பு கேடாய் முடியும் என கருணாநிதி காங்கிரஸ் விமர்சித்துள்ளார். அதைவிட திமுகவை காங்கிரசார் கடுமையாக விமர்சித்துள்ளனர். ஆனால் அனைத்தையும் கடந்து இவ்விரு கட்சிகளும் கைகோர்த்து செயல்படும் அளவுக்கு கொள்கையில் உறுதிமிக்கவையாக இருந்து வருகின்றன. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில்  திமுக தலைவர் ஸ்டாலின் கராராக நடந்து கொண்டார். ஆட்சியில் இருந்தவரை அதிகாரத்தை பயன்படுத்தி திமுகவிடம் பேரம் பேசி அதிக தொகுதிகளை பெறுவது காங்கிரஸ் வழக்கமாக வைத்திருந்தது. ஆனால்  இந்த முறை அதுபோன்ற எந்த வாய்ப்பும் காங்கிரசுக்கு இல்லாமல் போனதால், திமுக கொடுக்கும் தொகுதிகளை பெற்றுக் கொள்ளும் நிலைமையிலேயே அந்த கட்சி இருந்து வருகிறது. 

கடந்த சட்டமன்ற தேர்தலில் 40 தொகுதிகளை காங்கிரஸ் கேட்க 20 தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என ஸ்டாலின் கண்டிப்பு காட்டினார். அதன்பிறகு தனது நிலையை உணர்ந்து கொண்ட காங்கிரஸ் 27 தொகுதிகளையாவது தர வேண்டும் என வலியுறுத்தியது, ஆனால் ஸ்டாலின் அதற்கும் பிடி கொடுக்கவே இல்லை. இதனால் கையறு நிலைக்கு தள்ளப்பட்ட காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே. எஸ் அழகிரி, கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கண்ணீர் விட்டு அழுதார். திமுக 15 ஆண்டுகள் நமது கூட்டணியில் அங்கம் வகித்துள்ளது. ஆனால் இப்போது கேட்ட தொகுதிகளை ஒதுக்காமல் இழுத்தடிப்பு செய்து வருகிறது. தொகுதி எண்ணிக்கை குறைவு என்பதை விட நம்மை நடத்தும் விதம்.. என பேச்சை நிறுத்திவிட்டு கண்கலங்கினார்.  இது அப்போது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் திமுக மீது கோபத்தை ஏற்படுத்தியது. ஆனால் ஒருவழியாக சமாளித்து 25 தொகுதிகள் காங்கிற்கு ஒதுக்கப்பட்டது. அப்போதுதான் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே. எஸ் அழகிரிக்கு போன உயிர் திரும்ப வந்தது. அந்த அளவிற்கு கடந்த தேர்தலில் கூட்டணி பேரம் மிகக்கடுமையான இருந்தது.

தற்போது நகர்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுடனான இடப் பங்கீடு பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. அப்பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி கலந்து கொண்டார். கடந்த சட்டமன்ற தேர்தலில் தானக்கு ஏற்பட்ட அனுபவத்துடன், இந்த முறை என்ன நடக்குமோ? ஏது நடக்குமோ என்ற பதற்றத்துடன் அறிவாலயத்திற்கு சென்ற அழகிரிக்கு இந்த முறை அனுசரனையாகவே நடந்து கொண்டுள்ளார் ஸ்டாலின். அதற்கு காரணம் நேற்று அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கே. எஸ் அழகிரி, முதலமைச்சர் தன்னிடம் அதிகம் பேசுவது இல்லையென குறைபட்டிருந்தார் என்பதே ஆகும். 

இந்நிலையில்தான் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வெளியில் வந்த செய்தியாளர்களை சந்தித்த அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். பேச்சு வார்த்தைக்கு சென்ற தன்னிடம் திமுக தலைவர் ஸ்டாலின் கனிவுடன் நடந்து கொண்டார், காங்கிரஸ் போட்டியிட விரும்பும் இடங்களை திமுக தலைமையிடம் எடுத்துக்கூறி உள்ளேன், தாங்கள் கேட்டுள்ளார் இடங்களை பரிசீலிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். பல இடங்களில் இடப் பங்கீடு தொடர்பாக சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேயர், நகரமன்ற தலைவர் பதவி இடங்கள் குறித்து தேர்தல் முடிவுக்குப் பிறகு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.

உள்ளே நுழைந்தவுடன் ஸ்டாலின் தேநீர் குடிக்க சொன்னதாகவும், துரைமுருகன் தன்னிடம் கனிவுடன் பேசியதாகவும் கூறினார். இதேபோல் அங்கிருந்த பேச்சு வார்த்தை குழுவினரும் தங்களை எழுந்து நின்று வரவேற்றதாகவும் அழகிரி மகிழ்ச்சி பொங்க கூறினார். இரு தரப்பினரும் தேனீர் குடித்தபடியே பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு 25 இடங்களைப் பெறுவதற்கு கே.எஸ் அழகிரியை தண்ணீர் குடிக்க வைத்த ஸ்டாலின், இப்போது டீ குடிக்க சொல்லி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!