" ராக்கெட் ராஜா கிட்ட நான் பேசிக்கிறேன்".. வெளிய எடுக்குற வேலைய பாருங்க.. கோர்ட் வாசலில் கதறிய ஹரி நாடார்.

By Ezhilarasan BabuFirst Published Jan 28, 2022, 3:46 PM IST
Highlights

கட்சியில் இருந்து என் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் அதற்கு உரிய பதிலை கட்சிக்கு நான் கொடுப்பேன், அப்போது கட்சி எடுக்கிற முடிவுக்கு நான் கட்டுப்படுவேன், ஆனால் மற்ற வேலைகளைப் நீங்கள் பாருங்கள்ஹரி நாடார் அங்கிருந்தவர்களிடம் கூறியதாகவும் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

மீண்டும் கட்சியில் இணைவது குறித்து ராக்கெட் ராஜாவிடம் நான் பேசிக் கொள்கிறேன், முதலில் என்னை வெளியில் எடுக்கும் வேலையை பாருங்கள் என ஹரி நாடார் அவரது ஆதரவாளர்களிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.  கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக பனங்காட்டு படையிலிருந்து ஹரி நாடார் தூக்கி எறியப்பட்டுள்ள நிலையில் அவர் இவ்வாறு  கூறி உள்ளதாக தெரிகிறது. நடமாடும் நகைக்கடை என பலராலும் அழைக்கப்பட்டு வந்த ஹரிநாடார்தான் தமிழகத்தில் இப்போது ஹாட் டாபிக்.  நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் பனங்காட்டு படை மக்கள் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு நாம் தமிழர் கட்சியை பின்னுக்கு தள்ளியதால் ஹரிநாடாரின் அரசியல் செல்வாக்கு உயர்ந்தது. ஹரி நாடார் என்றால் வெள்ளை ஜிப்பா, நீண்ட கூந்தல், சரம் சரமாக நகைகளை அணிந்திருப்பார் என்பதுதான் அவரது இமேஜ்.

வாழ்க்கையில் எப்படியாவது பணக்காரராக வேண்டும் என்ற நோக்கத்தில் சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு வந்தவர்களில் இவரும் ஒருவர். ஒரு கட்டத்தில் வட்டி தொழிலில் இறங்கி பலமுறைகேடுகள் செய்து அதன் மூலம் இவர் முன்னுக்கு வந்தார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது உள்ளது.

இதற்கிடையில் தான் பனங்காட்டு படை என்ற கட்சியில் ராக்கெட் ராஜா என்பவருடன் சேர்ந்து அரசியல்வாதியாக மாறினார் அவர். ஆலங்குளம் தொகுதியில் 2016 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 2வது இடத்திற்கு முன்னேறினார். அதன்பிறகு தன்னை பெரிய அரசியல் தலைவராக கருதத் தொடங்கிய ஹரி நாடார், பல பிரச்சினைகள் குறித்து கருத்து சொல்வது, பலரையும் ஏடாகூடமாக விமர்சிப்பது எனது இருந்து வந்தார். இந்நிலையில்தான் சீமான் விஜயலட்சுமிக்கு இடையே நடந்து வரும் மோதலில் தலையிட்டு கருத்து கூறிய ஹரிநாடார்,  நடிகை விஜயலட்சுமிக்கு கொலை மிரட்டல் கொடுத்ததோடு, தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  இதே நேரத்தில் பெங்களூருவைச் சேர்ந்த இருவருக்கு வங்கியில் லோன் வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் பெங்களூரு போலீசார் ஹரி நாடாரை கைது செய்து பரப்பன அக்ரஹார சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில்தான் விஜயலட்சுமி கொடுத்திருந்த புகாரின் பேரில் மீண்டும் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார், இந்நிலையில் ஹரி நாடாரின் மனைவியெனக் கூறிக்கொண்டு மலேசியாவில் சேர்ந்த மஞ்சுளா என்ற பெண், சென்னை வந்துள்ள நிலையில் அவருக்கும் ஹரியில் முதல் மனைவிக்கும் இடையே மேதல் வெடித்துள்ளது. இந்நிலையில்தான் பனங்காட்டு படை கட்சியிலிருந்து ஹரி நாடாரை  நீக்குவதாக அக்கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், திருநெல்வேலி மாவட்டம் மேல இலந்தைகுளம் சேர்ந்த திரு அ. ஹரி நாடார் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிவுறுத்தலின்படி, மாநில மாவட்ட நிர்வாகிகளின் ஒப்புதலின்படி அவர் வகித்து வந்த ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்படுகிறார். அதனால் அவரது  கருத்திற்கும், செயலுக்கும் இனி கட்சி பொறுப்பேற்காது. பனங்காட்டு படை கட்சி உறவுகள் அவரோடு கட்சி அரசியல் செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டியதில்லை என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் பண மோசடி வழக்கில் கைதாகி பெங்களூரில் இருந்த ஹரிநாடாரை திருவான்மியூர் போலீசார் விஜயலட்சுமி கொடுத்த புகாரில் கைது செய்து சென்னை கொண்டு வந்தனர், பின்னர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதில் அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.  முன்னதாக நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட போது ஏராளமான நாடார் அமைப்பினர் அவரை சந்திக்க காத்திருந்தனர்.

அப்போது அவர்களுடன் அவர் பகிர்ந்து கொண்டதை தமிழ்நாடு நாடார் மகாஜன சபை தலைவர் கே.எஸ்.எம் கார்த்திகேயன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியாக கொடுத்துள்ளார். அதில், தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து ராக்கெட் ராஜாவிடம் நேரில் சந்தித்து விளக்கம் அளித்து கொள்கிறேன், கட்சியில் இருந்து என் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் அதற்கு உரிய பதிலை கட்சிக்கு நான் கொடுப்பேன், அப்போது கட்சி எடுக்கிற முடிவுக்கு நான் கட்டுப்படுவேன், ஆனால் மற்ற வேலைகளைப் நீங்கள் பாருங்கள்ஹரி நாடார் அங்கிருந்தவர்களிடம் கூறியதாகவும் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

மேலும் இது குறித்து தெரிவித்துள்ள கார்த்திகேயன், ஹரி நாடாருக்கும் ராக்கெட் ராஜாவுக்கு நல்ல புரிதல் இருக்கிறது, இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவரை கட்சியை விட்டு ராக்கெட்  நீக்கி இருக்கிறார் என்றால் அது அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள பர்சனல் விஷயம், நிச்சயம் அவர்கள் இருவரும் பேசி முடிவு எடுப்பார்கள், ஹரி நாடார் வெளியில் வந்தவுடன் அதற்கான அறிக்கையை அவர்களே வெளியிடுவார்கள். இருவருக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை, முதற்கட்ட அறிக்கையில் கூட அவர் மீது போடப்பட்ட வழக்கை அவர் சந்தித்து வெளியில் வருவார் என்றுதான் பனங்காட்டுப்படை கட்சி தெரிவித்துள்ளது. இரண்டாவது அறிக்கையில்தான் அவரை நீக்குவதாக கூறியுள்ளனர். நிச்சயமாக ஹரி நாடார் வெளியில் வந்த பிறகு அதற்கான விளக்கத்தை கொடுப்பார். அதன் பிறகும் அவரை சேர்த்துக் கொள்வதும் சேர்த்துக் கொள்ளவும் அவர்கள் கட்சியினுடைய நிலைப்பாடு.  இவ்வாறு கார்த்திகேயன் கூறியுள்ளார். 
 

click me!