ஹரி நாடார் மேல கை வச்சுட்டீங்க.. விளைவு நாடாளுமன்ற தேர்தல்ல பாப்பீங்க.. திமுகவை மிரட்டும் நாடார் மகாஜன சபை.

By Ezhilarasan BabuFirst Published Jan 28, 2022, 2:33 PM IST
Highlights

எதிர்வரும் நகராட்சி, மாநகராட்சி தேர்தலை குறிவைத்து ஹரி நாடார் கைது நடந்துள்ளது. ஹரிநாடார் போன்றவர்களையே எங்களால் தூக்கி உள்ளே வைக்க முடியும் என்பதை மற்ற நாடார் அமைப்புகளுக்கு காட்ட திமுக அரசு இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ளது. திமுகவை எதிர்க்க நினைக்கும் நாடார் வேட்பாளர்களுக்கு  பயத்தை காட்டும் வகையில்தான் இந்த நடவடிக்கை உள்ளது. 

வளர்ந்து வரும் காட்சிகளை ஒடுக்குவதுதான் திமுகவின் வேலை என்றும் ஹரி நாடார் மீது திமுக கைவைத்துள்ளது இதன் தாக்கம் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தெரியவரும் என திமுகவை தமிழ்நாடு நாடார் மகாஜன சபை தலைவர் கே.எஸ்.எம் கார்த்திகேயன் எச்சரித்துள்ளார். ஹரி நாடார் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெற்றதால்தான் திமுக அங்கு வெற்றி வாய்ப்பை இழந்தது, இதனால் அச்சமடைந்துள்ள திமுக  ஹரி நாடாரை ஒடுக்க நினைக்கினது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் சுயேச்சையாக போட்டியிட்ட வேட்பாளர்களிலேயே அதிக வாக்குகளை பெற்றவர் ஹரி நாடார். வட்டிக்கு பணம் கொடுப்பது, தொழில் தொடங்க பணம் கேட்டு வருபவர்களுக்கு உடமைகளை எழுதி வாங்கிக்கொண்டு கடன் கொடுப்பது என பைனான்சியராக வலம் வந்தவர் ஹரி நாடார். நடமாடும் நகைக்கடையாக வலம் வந்த அவர், எப்போதும் 12 கிலோ எடை கொண்ட நகைகளை அணிந்திருப்பார் இதுதான் அவரின் அடையாளமாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பிடிபட்ட அவர், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் சோதிக்கப்பட்டார். பின்னர் அவர் அணிந்துள்ள நகை மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டவே, நகைகளுக்கான பில் கேட்கப்பட்டது. உரிய ஆவணங்களை காண்பித்த பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். அது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

அதன்பிறகு பனங்காட்டு படை என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து, அதில் முக்கிய பொறுப்பிலும் அவர் இருந்து வந்தார். இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு 37 ஆயிரத்து 727 வாக்குகள் பெற்றார். அதன்மூலம் திமுக வேட்பாளர் ஆலடி அருணாவின் வெற்றி வாய்ப்பு பறிக்கப்பட்டது. அதன் பிறகு தன்னை பெரிய அரசியல் செல்வாக்குள்ள தலைவராக கருதிக் கொண்ட ஹரி நாடார் பல அரசியல் கட்சித் தலைவர்களையும் சகட்டுமேனிக்கு விமர்சிக்க தொடங்கினார். அடிக்கடி யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்து பல மூத்த தலைவர்களையும் அனாயசமாக விமர்சிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார். குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் விமர்சித்த அவர், ஆலங்குளம் தொகுதியில் மோதிப் பார்க்க தயாரா என சவாலுக்கு அழைத்தார் அவர். அப்போது அவரை பலரும் கடுமையாக விமர்சித்தனர்.

அதைத்தொடர்ந்து சீமானை தாக்கிப் பேசிய நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் தலையிட்டு விஜயலட்சுமியை எச்சரித்து பேசினார். அதற்கு ஆவர் மீது கொலை மிரட்டல் புகார் கொடுத்தார் விஜயலட்சுமி. அடுத்தடுத்து பல சர்ச்சைகளில்  சிக்கிய அவர் பெங்களூருவை சேர்ந்த இருவரிடம் வட்டிக்கு பணம் வாங்கி தருவதாக கூறி 16 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கர்நாடக மாநில போலீசார் கோவளத்தில் வைத்து அவரை கைது செய்தனர். இது தொடர்பாக அவர் பரப்பக ஹக்ரகார சிறையில் இருந்து வந்த  நிலையில், விஜயலட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு தற்போது கடலூர் சிறையில் இருந்து வருகிறார். இதற்கிடையில் அவர் சார்ந்திருந்த கட்சி அவரை கைவிட்டு விட்டதாக கூறப்பட்டது. கட்சியை நம்பி ஓவராக பேசி வம்பில் மாட்டிக் கொண்டதை உணர்ந்து ஹரிநாடார்  கட்சி தன்னை முதுகில் குத்தி விட்டது, கட்சியை கையில் வைத்திருப்பவர்கள் தான் சிறையில் இருந்து விடுதலையாகி வந்து விடக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்கள் என்று அவர் புலம்பி வருகிறார் என தகவல்கள் வெளியானது.

இதற்கிடையில் ஹரி நாடாரை சிறையில் இருந்து மீட்க மலேசியாவைச் சேர்ந்த மஞ்சு என்ற பெண் தமிழகம் வந்துள்ளார். தன்னை ஹரி நாடாரின் மனைவி என கூறிக்கொள்ளும் அவர், தனக்கும் ஹரி நாடாருக்கும் குழந்தை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் ஹரிநாடாரின் முதல் மனைவி ஷாலினிக்கும் மஞ்சுவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மற்றோரு புறம் இந்த விவகாரம் பூதாகாரமாகி வருகிறது. இந்நிலையில் ஹரி நாடாரின் கட்சிப் பதவியும் பறிக்கப்பட்டு அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இது பனங்காட்டு படை மற்றும் நாடார் இளைஞர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள அகில இந்திய நாடார் மகாஜனமடை தலைவர் கேஎஸ்எம் கார்த்திகேயன் நாடார், ஹரிநாடாரின் வளர்ச்சி பிடிக்காமல் திமுக அவரை ஒடுக்கும் முயற்ச்சிதான் இந்தகைது நடவடிக்கை என கூறியுள்ளார். அவர் கடுத்துள்ள பேட்டியின் விவரம் பின்வருமாறு:- 

எந்த ஒரு வளர்ந்து வரும் கட்சியையும் ஒடுக்குவது தான் திமுக அதிமுக போன்ற பெரிய கட்சிகளில் வேலை, அந்த வகையில் தான் தற்போது திமுகவின் பார்வை ஹரிநாடார் மீது திரும்பி இருக்கிறது, ஹரி நாடார் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் தனித்து நின்று 37 ஆயிரம் வாக்குகள் பெற்றிருக்கிறார். ஹரி நாடார் மற்றும் ராக்கெட் ராஜா யோசித்தது போல நாடார் சமுதாயத்தில் உள்ள  தலைவர்கள் யோசித்து தென் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளும் போட்டியிட்டால் அது திமுக அதிமுக போன்ற கட்சிகளை பெரிய அளவில் பாதிக்கும். இப்படி ஒரு முடிவை நாடார் மக்கள் எடுத்தால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கும், ஒரு நாடார் அமைப்பு ஒரு தொகுதியில் நின்றால் கூட போதும், நிலைமை மாறிவிடும். அதற்காகத்தான் ஹரிநாடார் அவர்களை ராக்கெட்ராஜா களத்தில் இறங்கினார். நாடார் சமுதாயத்தின் பிரதிநிதியாக கடந்த தேர்தலில் அவர் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார். அவர் எடுத்துள்ள 37 ஆயிரம் வாக்குகள் என்பது நடார் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விழிப்புணர்வை முடக்க வேண்டும் என்று திமுக நினைக்கிறது.

எதிர்வரும் நகராட்சி, மாநகராட்சி தேர்தலை குறிவைத்து ஹரி நாடார் கைது நடந்துள்ளது. ஹரிநாடார் போன்றவர்களையே எங்களால் தூக்கி உள்ளே வைக்க முடியும் என்பதை மற்ற நாடார் அமைப்புகளுக்கு காட்ட திமுக அரசு இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ளது. திமுகவை எதிர்க்க நினைக்கும் நாடார் வேட்பாளர்களுக்கு  பயத்தை காட்டும் வகையில்தான் இந்த நடவடிக்கை உள்ளது. மற்ற கட்சிகளில் நாடார் பிரதிநிதிகள் இல்லை என்று நாங்கள் கூறவில்லை, கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆலங்குளத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவருமே நாடார் சமூகத்தை சார்ந்தவர்கள்தான், திமுக நாடாராக, அதிமுக நாடாராக, பாஜக நாடாராக, காங்கிரஸ் நாடாராக பிரிந்து இருக்கக்கூடிய நிலையில், நான் நாடார்,  நாடார்களுக்காக மட்டுமே பேசுவேன் என களம் இறங்கியவர் தான் ஹரி நாடார்.  ராக்கெட் ராஜா அவர்களால் அவர் களம் இறக்கப்பட்டார், அந்த தேர்தலில் அவருக்கு அதிக வாக்குகள் கிடைத்தது.

இதேபோல வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 10 தொகுதிகளில் தென்மாவட்டங்களில் நாடார்கள் போட்டியிட்டால் திமுகவின் நிலைமை என்ன ஆகும். ஒரு நாடார் வேட்பாளர் ஒரு தொகுதியில் ஒன்றரை லட்சம் ஓட்டுகள் வாங்கினால்கூட தேர்தல் முடிவு தலைகீழாக மாறிவிடும். அந்த பயம் தான் இப்போது ஹரி நாடாரை பழிவாங்க வைத்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

 

click me!