தொழில் முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்க சிங்கப்பூர் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் சிங்கப்பூர் பயணத்தை வெற்றிகரமாக முடித்த பின்னர் ஜப்பானில் உள்ள டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்தோடு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்.
ஜப்பானில் ஸ்டாலின்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். சிங்கப்பூர் பயணத்தை வெற்றிகரமாக முடித்த அவர், நேற்று சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு ஜப்பான் சென்றடைந்தார். அங்கு இன்று காலை தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (26.06.2023). ஒசாகா மாகாணத்தில் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் (Daicel Safety Systems) நிறுவனத்திற்கும் இடையே, திருப்போரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் Airbag Inflator தயாரிப்பு தொழிற்சாலையை 63 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 53 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
முதலீட்டு ஊக்குவிப்பு மாநாட்டில் ஸ்டாலின்
இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டைசல் நிறுவனத்தின் இயக்குநர் திரு கெள் பாண்டோ அவர்களும், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.வே.விஷ்ணு. இ.ஆ.ப. அவர்களும் கையொப்பமிட்டனர். மாண்புமிகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா. தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. எஸ். கிருஷ்ணன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர். இதனையடுத்து ஜப்பான் நாட்டில், ஒரு முதலீட்டு ஊக்குவிப்பு மாநாடும் நடைபெற உள்ளது. அப்போது பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட உள்ளன.
இதையும் படியுங்கள்