அதிமுக ஆட்சியின் போது கொரோனா தடுப்பூசி குறித்து ஸ்டாலின் சந்தேகம் எழுப்பியதால் ஏராளமானோர் தடுப்பூசி போட முன்வரவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக ஆட்சியின் போது கொரோனா தடுப்பூசி குறித்து ஸ்டாலின் சந்தேகம் எழுப்பியதால் ஏராளமானோர் தடுப்பூசி போட முன்வரவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அரசு மருத்துவமனையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- ஆக்ஸிஜன் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. ஆக்ஸிஜன் படுக்கைள் அதிகரிக்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் ஆக்ஸிஜன் படுக்கைகள் ஏற்படுத்த வேண்டும். சேலம் இரும்பாலையில், 500 படுக்கைகள் ஏற்படுத்தப்படும் என தமிழக அரசு கூறியது. ஆனால், இதுவரை ஏற்படுத்தவில்லை. அதிமுக அரசால் ஏற்படுத்தப்பட்ட படுக்கைகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
undefined
சென்னையில் இருந்து 6 லட்சம் பேர் சொந்து ஊருக்கு சென்றதால், மற்ற மாவட்டங்களில் தொற்று அதிகரித்து உள்ளது. ஊரடங்கு அறிவிப்பில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக கிராமங்களில் தொற்று அதிகரிக்கிறது. தமிழக அரசின் மெத்தனத்தால் தொற்றால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. சேலம் இரும்பாலையில் 500 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும் என தெரிவித்த அரசு இன்னும் அதை செயல்படுத்தவில்லை. அதிமுக அரசால் ஏற்படுத்தப்பட்ட படுக்கை வசதிகள் மட்டுமே தற்போது உள்ளது. சேலம் மாவட்டத்தில் 3,800 படுக்கை வசதி மட்டுமே உள்ள நிலையில், 11 ஆயிரம் உள்ளதாக அரசு பொய் கணக்கு காட்டுகிறது. தமிழக அரசு தவறாக புள்ளி விவரங்களை கூறுவதாக எதிர்க்கட்சி தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தொற்று பரவல் அதிகரிக்கும் நிலையில் கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையை கூட அரசு அதிகரிக்கவில்லை. ஆர்டிபிசிஆர் பரிசோதனையை அதிகப்படுத்தினால் மட்டுமே கொரோனா பாதிப்பை கண்டறிந்து தடுக்க முடியும். ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது அதிகரித்து வருவதாக எடப்பாடி பழனிசாமி புகார் தெரிவித்துள்ளார். அரசு மருத்துகள் போல் தனியார் மருத்துவமனைகளுக்கும் ஆக்சிஜனை தேவையான அளவுக்கு வழங்க வேண்டும். தமிழக அரசு தவறான புள்ளி விவரங்களை கூறுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக ஆட்சியின் போது கொரோனா தடுப்பூசி குறித்து பொய் பிரச்சாரம் செய்தவர் ஸ்டாலின். கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடையே ஸ்டாலின் அச்சத்தை ஏற்படுத்தினார். ஸ்டாலின் சந்தேகம் எழுப்பியதால் ஏராளமானோர் தடுப்பூசி போட முன்வரவில்லை. தற்போது ஸ்டாலினே தடுப்பூசி போட்டுக்கொள்ள சொல்கிறார். இதை அப்போதே கூறியிருக்கலாம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.