
1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என அறிவித்ததை அடுத்து நாடுன்முழுதும் பொதுமக்கள் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். சில்லறை ரூபாய்களுக்காக வேலையை விட்டு மணிக்கணக்கில் வங்கி வாசலில் நிற்கிற நிலை ஏற்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இதை ஆரம்பித்தவர்கள் கூட போகப்போக பொதுமக்களின் துயரத்தை பார்த்து விமர்சிக்க ஆரம்பித்தனர். நடைமுறைப்படுத்துவதில் உள்ள கடுமையான துன்பங்களை கருத்தில் கொண்டு அனைத்து அரசியல் கட்சிகளும் விமர்சிக்க ஆரம்பித்தன.
ஆரம்பத்தில் இதை வரவேற்ற ஸ்டாலின் பின்னர் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார். பொதுமக்களை துன்பப்படுத்துவதை தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் விமர்சிக்க ஆரம்பித்தார். நேற்று திருப்பரங்குன்றம் தொகுதியில் பிரச்சாரத்தில் இருந்த ஸ்டாலின் மதுரை நல்லூரில் திடீரென அங்குள்ள ஸ்டேட் வங்கிக்கு சென்றார்.
அங்குள்ள பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பொதுமக்கள் அவரிடம் தங்களது குறைகளை கூறினார்கள். இதற்கு முன்னார் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத்தலைவர் ராகுல் காந்தி திடீரென ஏடிஎம் கியூவில் நின்றது நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது மு.க.ஸ்டாலின் ராகுல் வழியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டுள்ளார்.