"ஜெயலலிதா உடல் நலம் பெற்று நல்லாட்சி நடத்தணும்" - கையெடுத்து கும்பிட்டு வேண்டிய விஜயகாந்த்

Asianet News Tamil  
Published : Nov 15, 2016, 08:19 PM ISTUpdated : Sep 19, 2018, 01:41 AM IST
"ஜெயலலிதா உடல் நலம் பெற்று நல்லாட்சி நடத்தணும்" - கையெடுத்து கும்பிட்டு வேண்டிய விஜயகாந்த்

சுருக்கம்

முதல்வர் ஜெயலலிதாவை கடைசிவரை நேரில் சென்று பார்க்காத தலைவர்களில் ஒருவரான விஜயகாந்த் , முதல்வர் குணமடைந்து நல்லாட்சி புரியணும் என கையெடுத்து கும்பிட்டு வேண்டிகொண்டார். முதல்வர் இல்லம் திரும்பியதும் அனுமதித்தால் நேரில் சென்று பார்ப்பேன் என்று தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் 22ம் தேதி, முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சையால் உடல் நலம் பெற்றார்.

இதையொட்டி, முதலமைச்சர் ஜெயலலிதா, உடலநிலை பூரணமாக குணமடைந்துள்ளதாகவும், இன்னும் சில நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார், அவரே அதற்கான தேதியை அறிவிப்பார் என அப்பல்லோ மருத்துவமனை தலைவர்  பிரதாப் சி.ரெட்டி தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவை பார்க்காத எதிர்கட்சித்தலைவர்களே இல்லை எனும் அளவுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ,காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி  மத்திய அமைச்சர்கள் வெங்கய்யா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய தலைவர் அமீத்ஷா, , ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர் நீதா அம்பானி  மற்றும் ரஜினி உள்ளிட்ட  சினிமா நட்சத்திரங்கள் , உள்பட ஏராளமானோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று, முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தனர்.

ஆனால், கடந்த ஆட்சியின் போது சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்தவரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த், முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து விசாரிக்காமல் இருந்தார். இதுபற்றி கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்கள், அவரிடம் கேட்டபோது, “நான் ஏன் அவரை பார்க்க வேண்டும்” என கேட்டார். 

இந்நிலையில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில்  தேர்தல் பிரச்சார கூட்டத்தில் விஜயகாந்த் கலந்துகொண்டார்.  அக்கட்சியின் வேட்பாளர் அரவை எம்.முத்துவை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், மற்றவர்களைப்போல் முதல்வரை மருத்துவமனைக்கு சென்று சந்திக்க மாட்டேன் , எல்லோரும் நடிப்பதைப்போல் நான் நடிக்க மாட்டேன்.  என்னை நேரில் சந்திக்க அனுமதிக்கட்டும் நான் சென்று பார்க்கத் தயார். முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைந்து திரும்பியதும் அவரை வீட்டிற்கு சென்று நேரில் சந்திப்பேன் என்றார். 

என்னை பொறுத்தவரை இறைவன் அருளால் ஜெயலலிதா பூரண குணமடைந்து மீண்டும் நல்லாட்சி புரிய வேண்டும் என்பதுதான் என் விருப்பம் என்று  இரண்டு கையையும் மேலே தூக்கி கும்பிட்டு பேசினார். இதை பார்த்து தொண்டர்கள் கரகோஷம் எழுப்பினர்.

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது காவல்துறை நடவடிக்கை எங்கே? நீதிமன்ற படியேறிய காங்கிரஸ் தலைவர் பிரபு!
அதிமேதாவிகளுக்கு பதில் சொல்ல முடியாது.. ஒரேடியாக முடிச்சு விட்ட ப.சிதம்பரம்! கதர் கட்சியில் கலகம்!