
சென்னை கிண்டியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசு செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார்.
தனக்காக பிரார்த்தனை செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சரே கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டிருக்கிறார் என்றும், முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்தார். முதலமைச்சர் விரைவில் பூரண குணமடைந்து அவருடைய அன்றாட பணிகளுகு;கு திரும்ப இறைவன் அவருக்கு நல்ல உடல் நலம் தர காங்கிரஸ் சார்பாக பிரர்த்திப்பதாக திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
தொடர்ந்து நோட்டுக்கள் செல்லாது என்பது குறித்து பத்திரிக்கையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த திருநாவுக்கரசர்,
மக்களை சாகடிக்காதீர்கள் என்று தான் மக்கள் கூறுகிறார்கள். ஆனால் மோடியோ நான் சாக தயார் என்றும், பொது இடத்தில் வைத்து என்னை எரிக்கட்டும் என்று அவர் பேசுவது மக்களின் கோபத்திலிருந்து தப்பிக்கவே மோடி நாடகமாடுகிறார் என தெரிவித்தார்.
மேலும், சிரிக்கிறார், அழுகிறார், ராகுல் காந்தி கூறியதைபோல் மோடி மாறி மாறி நாடகமாடுவதை மக்கள் கண்டிப்பாக ஏற்க மாட்டார்கள் என திருநாவுக்கரசர் தெரிவித்தார்.