
தமிழ் மொழியின் சிறப்பை பிரதமர் மோடி பாராட்டியதற்கு நன்றி தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், உண்மையிலேயே அவர் தமிழ் மொடிழயை மதிப்பாரானால், அவரது மனசாட்சிக்கு உண்மை என தெரிந்தால் தமிழை ஆட்சி மொழியாகவும், , வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், பள்ளி மாணவ-மாணவியரின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்ததுடன் மனஅழுத்தத்தை வென்று, தேர்வுகளை எதிர்கொள்ள தன்னம்பிக்கை மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினார்..
வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள மாணவர்களிடையே மொழிப்பிரச்சனையால் சரியாக உரையாட முடியாமல் போனதற்க்கு வருத்தம் தெரிவிப்பதாக பிரதமர் மோடி தனது பேச்சில் குறிப்பிட்டார்.
தொடர்ந்த பேசிய அவர், . ஒரு மொழியை தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். உதாரணமாக தமிழ்.. பழமையான தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விடவும் பழமையானது என்பது நிறைய பேருக்கு தெரியாது. நிறைய அழகுகளை தன்னகத்தே கொண்டது தமிழ் மொழியாகும் என குறிப்பிட்டார்.
இது குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " சமஸ்கிருதத்தை விட தமிழ் பழமையானது என்ற பிரதமர் கருத்தை வரவேற்கிறேன். தமிழ்மொழியைப் பற்றி அறிந்து உணர்ந்து அவர் அறிவித்திருக்கும் கருத்து அவருடைய மனசாட்சிக்கு உண்மையெனில், தமிழை மத்திய ஆட்சி மொழியாகவும், உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியிள்ளார்.
அதேபோல், தாய்மொழியாம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு, சமஸ்கிருதத்திற்கு இணையாக நிதி ஒதுக்கீடு செய்து, உலகப் பொதுமறையாம் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமெனவும் பிரதமர் மோடியை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.