
பிரதமர் - ஒபிஎஸ்சின் தனிப்பட்ட பேச்சு குறித்து தான் கருத்து சொல்ல முடியாது எனவும் அதிமுகவின் தனிப்பட்ட கொள்கைகளை கடைபிடிப்போம் எனவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நல்ல கருத்துக்களை யார் சொன்னாலும் ஏற்றுக்கொண்டு செயல்படுவோம் எனவும் அதில் உள்நோக்கத்தை திணிப்பது வேண்டாதது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தர்மயுத்தம் என்ற பெயரில் சசிகலாவை எதிர்த்து முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததோடு ,அதிமுகவிலிருந்து வெளியேறினார் ஓபிஎஸ். இதையடுத்து அக்கட்சி இரண்டாக உடைந்தது.
இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக்கப்பட்டார். சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். இதைனையடுத்து ஓபிஎஸ்ம், இபிஎஸ்ம் இணைந்தனர். அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக சசிகலாவால் நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன் வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் தேனியில் நடைபெற்ற அதிமுக செயல் வீர்ர்கள் கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் ஓபிஎஸ் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாலேயே அணிகளை இணைத்தேன் எனவும் எனக்கு பதவி ஆசை கிடையாது எனவும் தெரிவித்தார்.
மேலும் ஜெயலலிதா எல்லாவற்றையும் கொடுத்து விட்டார் எனவும் தெரிவித்தார்.
இதனால் எதிர்கட்சிகள் நாங்கள் ஏற்கனவே சொன்னது போல் பாஜகவின் பினாமி அரசாக அதிமுக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டின.
இந்நிலையில் இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பிரதமர் - ஒபிஎஸ்சின் தனிப்பட்ட பேச்சு குறித்து தான் கருத்து சொல்ல முடியாது எனவும் அதிமுகவின் தனிப்பட்ட கொள்கைகளை கடைபிடிப்போம் எனவும் தெரிவித்தார்.
மேலும் கொள்ளையடித்த சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற நல்ல கருத்தை யார் சொன்னாலும் தமிழக அரசு ஏற்கும் எனவும் தெரிவித்தார்.